புதியதாக நியமிக்கப்பட்ட தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், தலைவர்கள் சிலைக்கு மாலை

தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக முத்துக்குமார் நியமனம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
புதியதாக நியமிக்கப்பட்ட தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், தலைவர்கள் சிலைக்கு மாலை
Published on

ஆரல்வாய்மொழி :

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் குமரி சட்ட மன்றத்தொகுதி உறுப்பின ருமான தளவாய்சுந்தரம் பரிந்துரையின்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமாரை நியமனம் செய்தார். இதையடுத்து புதியதாக நியமனம் செய்யப்பட்ட முத்துக்குமார் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள்புரம் காமராஜர் சிலை, வடக்கூர் வ.உ.சி.சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் ஆரல்வாய்மொழி நகர செயலாளராக அறி விக்கப்பட்டுள்ள சுடலை யாண்டி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் மோகன், மணி, கிளை செயலாளர்கள் அய்யப்பன், ராமலிங்கம், வக்கீல் லட்சுமி நாராயணன், இணை செயலாளர் பேச்சியம்மாள், தொழிற்சங்கம் மாசாணம், கச்சேரி நாகராஜன், சிவ சங்கரன், எபநேசர், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com