என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விஜய் வசந்த் பங்கேற்பு
- குளச்சல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கே.எஸ். அழகிரி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக குளச்சல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
மாவட்ட தலைவர் கே.டி. உதயம், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story






