search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Student Suicide"

    • மன உளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி, முகுந்தன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சூர்யா (வயது 19). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வை சரியாக எழுதவில்லை என, சூர்யா மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சூர்யா தனது வீட்டில், புடவை கொண்டு தூக்கில் தொங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    • மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை :

    அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    • பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன்.

    சென்னை :

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி சுஜிர்தா (வயது 27) பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும், இனிமேல் இதுபோன்று எந்தவொரு மாணவிக்கும் துயரம் ஏற்படாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடப்பதற்கு, இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், கல்லூரிக்கு படிக்கச் சென்ற மகளை இழந்து தீராத வேதனையில் வாடும், முதுநிலை மருத்துவ கல்லூரி மாணவியின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கல்லூரி விடுதியில் சோதனை செய்த போலீசார், சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
    • ஒரு பேராசிரியர், மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் சுஜிர்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி.நகரைச் சேர்ந்த வியாபாரி சிவகுமார் மகள் டாக்டர் சுஜிர்தா (வயது27), முதுநிலை எம்.டி பயிற்சி டாக்டராக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் மாணவியர்களின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    நேற்று அவர் கல்லூரிக்கு காலையில் வராததால், சக மாணவிகள் மதியம் விடுதி அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுஜிர்தா மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் வந்து பார்த்து பரிசோதனை செய்தனர். அப்போது சுஜிர்தா இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது.

    இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்து சுஜிர்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் முதுகலை படிக்கும் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (குலசேகரம்), ஜானகி (திருவட்டார்) மற்றும் போலீசார் சுஜிர்தா தற்கொலை செய்த விடுதி அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மகள் தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கபட்டிருந்த சுஜிர்தா உடலைப் பார்த்து கதறி அழுதனர்.தொடர்ந்து சிவகுமார், குலசேகரம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    "எனது மூத்த மகள் சுஜிர்தா, சென்னையில் தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டரானார். பின்னர் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் முதுநிலை எம்.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கல்லூரி நிர்வகத்தில் இருந்து போன் வந்தது.

    உங்கள் மகள் சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது என போனில் பேசியவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

    உடனே குடும்பத்தினருடன் கிளம்பி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி வந்தோம். அங்கு வந்து பார்த்த போது எனது மகளின் உடலை பிணவறையில் வைத்து இருந்தனர். அவளது மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதில் உள்ள மர்மங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரனை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சூழலில் கல்லூரி விடுதியில் சோதனை செய்த போலீசார், சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ஒரு பெண் பேராசிரியை உள்பட 3 பேராசிரியர்கள் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாக சுஜிர்தா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஒரு பேராசிரியர், மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் சுஜிர்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டிருக்கலாமா? அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜானகி மற்றும் போலீசார், ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி சென்று இன்று காலை விசாரணை நடத்தினர். சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்துடன் சென்ற அவர்கள், அதில் குறிப்பிட்டிருந்த 3 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    ×