என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் படையினருக்கான இரு சக்கர விழிப்புணர்வு துவக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி.
- 60 வாகனங்களில் 120 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் சி.ஆர்.பி.எப் சார்பில் நடைபெறும் மகளிர் படையினருக்கான இரு சக்கர விழிப்புணர்வு பயணத்தின் துவக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி முதல் கேவடியா வரையிலான இந்த பயணத்தில் 60 வாகனங்களில் 120 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நாராயண சாமி, சி.ஆர்.பி.எப் ரவி தீப் சாஹி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






