என் மலர்
கன்னியாகுமரி
- தாக்குதலில் ஈடுபட்ட ராஜா என்ற சுரேஷ்குமார், ஜெகன், ஜெரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- எட்வின் ராபர்ட்டை அவதூறாக பேசி தகராறு செய்ததோடு அரிவாளாலும் வெட்டினர்.
தக்கலை :
தக்கலை திட்டிமேல்கோணம் அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் அருண் என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முளகுமூடு பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு டீ கடையில் இருவரும் டீ குடித்தனர்.
அப்போது அங்கு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் ராஜா என்ற சுரேஷ்குமார் வந்தார். அவருக்கும் அருணுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை எட்வின் ராபர்ட் தலையிட்டு சமரசம் செய்து வைத்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை எட்வின் ராபர்ட், தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜா தனது நண்பர்கள் ஜெகன், ஜெரிக் ஆகியோருடன் வந்துள்ளார். அவர்கள், எட்வின் ராபர்ட்டை அவதூறாக பேசி தகராறு செய்ததோடு அரிவாளாலும் வெட்டினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாமியார் மடம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசில், எட்வின் ராபர்ட் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ராஜா என்ற சுரேஷ்குமார், ஜெகன், ஜெரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- மழைநீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.
- பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரணியல் :
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறியில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. சுமார் 2 அடி உயரம் வரை தேங்கி நின்ற வெள்ளத்தில் வாகனங்கள் மிதந்தபடி சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலை அடிப்பகுதி வழியாக கட்டப்பாட்டு உள்ள அடிமடை வழியாக வெள்ளம் மறுபக்கம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் இழுத்து சென்றதில் இந்த அடிமடையில் சிக்கிதான் தாயுடன் வந்த 7 வயது மாணவன் ஆஷிக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது:-
மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழைநீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மழைநீர் ஓடையில் மூடப்பட்டுள்ள இரும்பு கிரில்களிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் சிக்கி வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்பதும், கடைகளுக்குள் தண்ணீர் புகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவனின் சிகிச்சை செலவு மற்றும் இழப்பீடுகளை பேரூர் நிர்வாகம் வழங்க வேண்டும். அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் கண்டன போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றனர்.
- மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்க்காஷ்டமி திருவிழா இன்று தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரதயாத்திரை இன்று காலை தொடங்கியது.
முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு இருமுடி கட்டு மற்றும் புனித நீர் குடங்களில் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு உள்ள சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காளிமலை டிரஸ்ட் முன்னாள் தலைவர் சலீம்குமார் முன்னிலை வகித்தார். சின்மயா மிஷின் சுவாமி நிஜானந்தா ஆசியுரை வழங்கினார். விழாவின் தொடக்கமாக காளிமலை டிரஸ்ட் தலைவர் ராஜேந்திரன் விழா கொடியை குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜாராமிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமுத்திரகிரி ரதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுவாமிதோப்பு குரு சிவசந்திரன், இலங்கை அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள், இந்து முன்னணி மாநில பேச்சாளர் வக்கீல் எஸ்.பி.அசோகன், மாவட்ட பொருளாளர் திரவியம், மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ரத யாத்திரைக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜாராம் விழா கொடியேந்தி சென்றார். விழா குழு அமைப்பாளர் கதிரேசன் ரதயாத்திரையை ஒருங்கிணைத்துக்கொண்டு சென்றார். இந்த ரத்தத்தில் பத்திரகாளியம்மன் விக்ரகம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ரதத்துக்கு பின்னால் பெண் பக்தர்கள் தலையில் இருமுடி சுமந்து கொண்டும், ஆண் பக்தர்கள் தலையில் புனித நீர் குடம் தாங்கிய படியும் ஊர்வலமாக சென்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், நாகர்கோவில், மீனாட்சிபுரம், வடசேரி, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை, மார்த்தாண்டம், உண்ணாமலை கடை, ஆற்றூர், சிதறால் கடையாலுமூடு, வழியாக 22-ந்தேதி பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையை சென்றடைகிறது.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்பு
- நவராத்திரி 4-ம் திருவிழா
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 4-ம் திருவிழாவான நேற்று மாலையில் ஆன்மீக உரையும், இரவு பக்தி இன்னிசை கச்சரியும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.
அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜன், சாமிதோப்பு குருசிவச்சந்தி ரன், அகஸ்தீஸ்வரம் ஒருங்கி ணைந்த ஒன்றிய பா.ஜ.க. பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வை குண்ட பெருமாள், கொட்டா ரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்த குமாரி உள்பட திரளான பக்தர்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களும் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி யும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது. 5-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும், அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்ம னுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராத னையும், தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது.
மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்கா வலர் டாக்டர் செந்தில்வேள் கூடை கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர் களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.
- நீதிமன்றம் செல்வனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் 294 (ஏ) ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரி புதுகுடியிருப்பு காமரா ஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்ற செல்வன் (வயது 54).
இவர் வடசேரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி யில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருந்து வந்தார். இதையடுத்து நீதிமன்றம் செல்வனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்வன் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்த னர்.
இந்த நிலையில் செல்வத்தின் மீது வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 294 (ஏ) ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
வாரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செல்வன் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த பிரபல ரவுடி லிங்கம் கொலை வழக்கிலும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
கன்னியாகுமரி :
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சிக் குட்பட்ட பால கிருஷ்ணன்புதூர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் உதிரப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.
அப்பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கும் திட்ட பணிக்கு ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மேலும், புத்தளம் பேரூராட்சிக் குட்பட்ட கீழபுத்தளம் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மணவாளபுரம், கீழபுத்தளம், புத்தளம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.35 லட்சமும், அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டரிப்பு அளம் பகுதியில் உள்ள தகனமேடை பகுதிக்கு செல்வதற்கு புதிய பாலம் அமைப்பதற்கு ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 88 லட்சத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் 2023-2024-ம் ஆண்டிற்கான மூலதன மானிய நிதியின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பேரூ ராட்சி பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுக்கி யதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- மாணவ-மாணவிகள் பங்கேற்பு
- கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி :
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு வண்ணங்கள் தீட்டினர்.
சிறப்பாக வண்ணம் தீட்டிய 5 மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓவியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்பாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சகாய ஜோஸ்பின், மாதா, ராணி ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர்.
நாகர்கோவில் :
நான் முதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லக சிறு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத் துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
நான் முதல்வன் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத் தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்பள்ளி ணகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர். பெற்றோரை இழந்த மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் போன்றோர் கள் அழைத்து செல்லப்பட்ட னர்.
இந்த கல்வி ஆண்டில் (2023-2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 59 அரசு மேல்நிலைப்பள்ளி களி லிருந்து குறைந்தபட்சம் பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் மொத்தம் 2,065 மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு களப்பயண மாக அழைத்து செல்ல திட்டமிடப்பட் டுள்ளது. மாணவர்கள் கல்லூரி களுக்கு வரும்போது அவர்களை பேராசிரி யர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வரவேற்று கல்லூரியில் உள்ள அனைத்து உட்கட்ட மைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்றவற்றை காண்பித்து மாணவர்க ளுக்கு ஆர்வமூட்டி அவர்களை கல்லூரியில் சேர தூண்ட வேண்டும்.
70 மாணவர்களுக்கு 1 பஸ் வீதம் அரசு பஸ்கள் வசதி செய்யப்படும்.
கூடுதல் பஸ்கள் தேவைப்படின் களப்ப யணம் மேற்கொள்ளப்படும் கல்லூரிகள், கல்லூரி பஸ் வசதி செய்யவும், அதற்கான செலவினம், மாணவர்க ளுக்கான உணவு வசதி போன்றவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியிலிருந்து மேற்கொள்ளவும் தெரி விக்கப்பட்டுள்ளது. தனி யார் கல்லூரிகளையும் தேர்வு செய்ய ஆலோ சிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார்
- காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
4-ம் திருவிழாவான நேற்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், களபம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 1000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.
இதனை காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சுரேஷ், கன்னியாகுமரி பார்க்வியூ பஜார் வியாபாரிகள் சங்க செயலாளர் பகவதியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் அறிவிப்பு
- கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
ராஜாக்கமங்கலம் :
குமரி மாவட்டம் மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்துசரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சிமெண்ட் ஒரு மூடைக்கு சுமார் 100 ரூபாய் வரை அதிக ரித்துள்ளது. கம்பி விலை யும் கணிசமாக மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இயற்கையிலிருந்து எடுக் கப்படும் கல்லை உடைத்து கொண்டு வரும் எம்.சாண்டுக்கு அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கு ரூ.1000 என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சந்தையில் அது ரூ.8 ஆயி ரத்துக்கு விற்கப்படு கிறது. இவ்வாறு கட்டுமான பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளதால் கட்டிடம் கட்டுபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஏழை தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.
இதனால் வீடு கட்டுவது மட்டுமல்லாமல் பல ஏழை மக்கள் தங்கள் குழந்தை களின் திருமணம், படிப்பு, மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பணியை கூட செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களாக குமரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் தென்னை மரங்கள் ஏராள மாக பட்டுப்போய் உள்ளது. இதனால் தென்னை விவசா யிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசினை கோரியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் அரசை கண்டித்து நவம்பர் 7-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவ லகம் முன்பு பொதுமக்களை திரட்டி போராட்டம் நட த் தப்படும்.
போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் ( நான்) தலைமை தாங்குகிறேன். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்கிறார். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., போராட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- திற்பரப்பு அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிப்பு
- விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி வந்த நிலையில் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப் படியாக குறைய தொடங்கி யுள்ளது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்ப தற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ள நிலையில் நேற்று மேலும் 9 வீடுகள் இடிந்து உள்ளது.
விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளை பொதுப்பணித்துறை அதி காரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வரு கிறார்கள். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.79 அடி யாக உள்ளது. அணைக்கு 1104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 228 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 40 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 841 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.78 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்ப ழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 50.94 அடியா கவும் உள்ளது. நாகர்கோ வில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.40 அடியாக உள்ளது.
- குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
- தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம், பல்லாரியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டிருந்தது.
அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் வெங்காயத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல்லாரி ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆகி வந்தது.
கடந்த வாரம் ரூ.30-ஆக உயர்ந்திருந்த நிலையில் நேற்று கிலோ ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் ரூ.7 உயர்ந்து கிலோ பல்லாரி ரூ.45-க்கு விற்பனையானது. பீன்ஸ் கடந்த சில நாட்களாகவே கிலோ ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு விலையும் அதிகமாக உள்ளது.
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வெள்ளரிக்காய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளரிக்காய்களின் வரத்து குறைய தொடங்கியதால் விலை உயரத் தொடங்கியுள்ளது.
ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.50-க்கு விற்பனையானது. இதேபோல் சேனை விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ சேனைக்காய் ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையை பொறுத்தமட்டில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த சில நாட்களாகவே ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வருகிறது.
கேரட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.35, முட்டைகோஸ் ரூ.20, தடியங்காய் ரூ.20, மிளகாய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.60, பாகற்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும். குறிப்பாக பல்லாரி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். அதேபோல தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்னும் சின்ன வெங்காயம், பல்லாரியின் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.






