search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்கும்
    X

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்கும்

    • பூத் கமிட்டி கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • மணல் கொள்ளை, அமைச்சர்கள் கைது என்று தி.மு.க. மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள ஒன்றிய கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அதிகமான வாக்குகளை பெற நிர்வாகிகள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு நாம் கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும். நமக்கு ஒரே எதிரி தி.மு.க தான்.

    மணல் கொள்ளை, அமைச்சர்கள் கைது என்று தி.மு.க. மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, கோவளம் போன்ற கடற்கரை கிரா மத்தை அ.தி.மு.க. மீண்டும் வென்றெடுத்து கன்னியா குமரி தொகுதி என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கும் பணியை விரை வாக முடிக்க வேண்டும்.

    இவ்வாறு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க செயலாளர் சிவபாலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆ.கோ.ஆறுமுகம், முத்துசாமி, பார்த்தசாரதி, தங்க நாடார், வக்கீல்பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தென்தாமரைகுளம் பேரூர் கழக செயலாளராக பணியாற்றி வந்த தாமரை தினேஷை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கும், அதற்கு பரிந்துரை செய்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சா வடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து சிறப்பாக பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டன.

    Next Story
    ×