மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவிலில் 27-ந்தேதி நடக்கிறதுமீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கலாம்.
மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாகர்கோவி லில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கலாம்.

பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com