நவராத்திரி 6-ம் திருவிழா - பகவதி அம்மன் வாகன பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நவராத்திரி 6-ம் திருவிழா - பகவதி அம்மன் வாகன பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக உரையும், இரவு பரதநாட்டி யமும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன் சென்றது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பி ரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளிக்காமதேனு வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தள வாய்சுந்தரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

பின்னர் சிறப்பு அன்ன தானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com