என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார்

    திருவட்டார், 

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பியில் கன்னியா குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லிஜீஸ்ஜீவன் ஜெயச்சந்திரபூபதி, ஷிஜூ , ஆல்வின்வினோ, ஜெபர்சன், பைஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினி வாயிலாக நூலக செயல்பாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலாஆல்பன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், குழித்துறை நகராட்சி தலைவர் பொன், ஆசைதம்பி, திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோன்மணி, நல்லூர் பேரூராட்சி தலைவர் வளர்மதி கிறிஸ்டோபர், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார். தொண்டர்கள் ஏராள மானோர் அவருக்கு புத்த கங்களை வழங்கினார்கள்.அப்போது தொண்டர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

    • நாளைஅதிகாலை பரிகார பூஜைகள் நடத்திய பிறகு திறக்கப்படும்
    • இன்று சந்திரகிரகணம் நடப்பதையொட்டி நடை அடைப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தின மும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படும். அதன்படி சூரிய கிரக ணத்தையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டா ர்கள். அதன்பி ன்னர் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப் பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது.

    அதன் பிறகு பக்தர்கள் தரி சனத்தி ற்கு அனுமதிக்கப்ப டுவார்கள். இந்த தகவலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம்.
    • 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பலமுறை வருகை தந்துள்ளேன். கட்சி உறுப்பினராக இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வந்து உள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்னால் மறக்க முடியாது. அமைச்சர் பதவி ஏற்று உங்களின் வாழ்த்துக்களை பெற தற்பொழுது வந்துள்ளேன்.

    சேலத்தில் இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம், தேனி, விருதுநகர், நெல்லையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் தற்போது செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்தது. இன்னும் 3 நாட்களில் குமரி மாவட்டம் பிறந்தநாள் கொண்டாடுகிறது. குமரி மாவட்டம் பிறந்த நவம்பர் மாதத்தில் தான் நானும் பிறந்துள்ளேன். சூரியனை ஓவியமாக, புகைப்படமாக பார்ப்பார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட மக்கள் மட்டும் தான் சூரியன் உதிப்பதை நேரில் பார்க்கிறீர்கள். வடக்கில் இமயமலை உயரமாக உள்ளது. தெற்கில் அய்யன் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. தலைவர் கலைஞர் இந்த சிலையை நிறுவினார். தலைவர் கட்டளையை எதிர்பாராமல் சுயநலம், தன்னலம் பார்க்காமல் நிறைவேற்றுபவர் தான் செயல்வீரர்கள். தலைவர் இடும் கட்டளையை செயல்படுத்துபவர்கள் தான் செயல்வீரர்கள்.

    சேலத்தில் நடக்கும் மாநாட்டிற்கு அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். என்னை விட நீங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்கள். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞரணியே சாட்சி.

    தி.மு.கவில் 23 அணிகள் உண்டு. கழகத்தின் முதன்மை அணி என கலைஞராலும், முதல்வராலும் பாராட்டப்பட்ட அணி இளைஞரணி. இளைஞரணி 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாநாட்டை 2017-ல் கலைஞர் தலைமையில் நம் தலைவர் நெல்லையில் நடத்தினார். 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும்.

    2 மாதம் முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. தயிர் சாதமா, புளி சாதமா என தெரியவில்லை. மாநாடு எதற்காக நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மிமிக்ரி, ஆடல்பாடல், பட்டப்பெயர் வழங்கும் நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடந்தன.

    கட்சிகொள்கை, இயக்க வரலாறு, இயக்க தலைவர்கள் பற்றி பேசவில்லை. ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என நடந்ததுதான் மதுரை மாநாடு.

    இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலம் மாநாடு நடக்க வேண்டும். நம் மாநாட்டில் இயக்கம் மற்றும் கொள்கை பற்றி பேசவேண்டும். தலைவர் ஆட்சி ஏற்று 2½ ஆண்டுகள் ஆகிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம்.

    இதில் 4 சாதனைகள் மிக முக்கியமாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட 3 கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து. பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம். அவர்கள் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்குகிறோம்.

    1 முதல் 5 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான இந்த திட்டத்தை பக்கத்து மாநிலங்கள் பாராட்டுகின்றன. முன்பு வேலைக்குச் செல்பவர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவிலை என வருத்தப்பட்டார்கள். இப்போது முதலமைச்சரை நம்பி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமான அனைத்து மகளிருக்கும் கலைஞர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். ஒரு கோடியே ஆறு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு அதனை வழங்கி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு.

    மோடி, மத்திய பிரதேசம் உள்பட எங்கு சென்றாலும் தி.மு.க. பற்றியும், தலைவரை பற்றியும் குறிப்பாக என்னைப் பற்றியும்தான் பேசுகிறார். அவருக்கு என் மேல் அவ்வளவு பிரியம். பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதாக சொல்கிறார். தமிழகமே ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். மத்திய ஆட்சியில் ஏர்போர்ட், ரோடு, ரெயில்வே என அனைத்து பொதுத்துறையும் அதானியிடம் கொடுத்து விட்டார். ஒரு தனியார் துறை எப்படி 9 வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது.

    சி.ஏ.ஜி அமைப்பு அறிக்கையில் 9 ஆண்டில் பா.ஜ.க ஊழல் வெளியே வந்துள்ளது. 7½ லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ரமணா படத்தில் இறந்து போனவருக்கு ஆபரேஷன் செய்ய சொன்னதுபோன்று, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

    நான் பேசாததை பேசியதாக பரப்பினார்கள். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் கலைஞரின் பேரன். எடப்பாடிக்கு நம் தலைவர் ஒரு பெயர் வைத்திருக்கிறார். பாதம் தாங்கி பழனிசாமி. அவர் பிரதமர், அமித்ஷாவின் பாதங்களை தாங்கி வருகிறார்.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம். கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும் என கருதி பிளஸ்-2 மதிப்பெண்ணே போதும் என மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்தது கலைஞர். ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    பா.ஜ.க நீட் தேர்வை நுழைத்து விட்டது. 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர். கடைசியாக சென்னையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனும், அவரது தந்தையும் இறந்துவிட்டனர். நீட் தேர்வு தி.மு.க பிரச்சனை இல்லை. அனைத்து மாணவர்களின் கல்வி உரிமை பிரச்சனை ஆகும்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னோம். 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி உரிமை அது. பா.ஜ.க கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியே வந்து விட்டது. இப்போதாவது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும். கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன்.

    இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் அதற்கான வெற்றிக்கான காரணம் நீங்கள் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், நீட் ரத்து கையெழுத்து மிகப்பெரிய நாடகம் என்கிறார் பழனிசாமி. உண்மையான நாடகக்காரர் யார் என சசிகலா, பன்னீர்செல்வத்திடம் கேட்டால் தெரியும்.

    மக்களை சந்திக்காமல் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனார். பின்னர் சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் பழனிசாமி.

    சேலத்தில் நடைபெறும் இளைஞர்களின் மாநாட்டில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட போஸ்ட் கார்டை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும்.

    இந்தியாவை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2021-ல் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்கள். தற்பொழுது 2024-ல் நடைபெறும் தேர்தலில் அடிமைகளை மட்டும் இன்றி எஜமானர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சேலம் இளைஞர் அணி மாநாடு இதற்கு முத்தாய்ப்பாய் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சேலம் மாநாட்டிற்கு ரூ.50 லட்சத்திற்கான நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் வழங்கினார்.

    • 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
    • 12 அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருகக் கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்ட தால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.

    இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் அமைந்து உள்ள சிவலிங்கம், குமரி மாவட்டத்தில் மிக உயர மான 5 1/2 அடி உயரமான சிலை ஆகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குக நாதீஸ்வரருக்கு அன்னாபி ஷேகம் நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான இன்று இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வ ரருக்கு அன்னா பிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.

    பின்னர்எண்ணை,பால்,பன்னீர்,இளநீர்,தயிர்,தேன் சந்தனம்,விபூதி,பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வரருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபி ஷேகம் நடந்தது.

    மதியம் 12 அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    • களியக்காவிளை-மார்த்தாண்டம், பளுகல் பகுதியில் நடைபெறுகிறது
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    களியக்காவிளை :

    களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார், திக்குறிச்சி, மலையோரம், இளஞ்சிறை, மூவோட்டுகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆற்றில் மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்து வந்தது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்ப டுத்தப்பட்டது. ஆனால் தற்போது களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இதுகுறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. எந்திரம், கிட்டாச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    இதனால் செம்மண் கடத்தல் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, அதங்கோடு, திருத்தோபுரம், மருதன்கோடு, வட்டவிளை, குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல், திக்குறிச்சி, பேரை, ஞா றான்விளை, மேல்புறம், மலை யோரம், செம்மண் காலை, கழுவன்திட்டை, இளஞ்சிறை, ராம வர்மன்சிறை, மூவோட்டு கோணம், மலையடி, மேக்கோடு, கண்ணுமாமூடு, பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான செம்மண் வாகனங்களில் கடத்தப்படு கிறது.

    எனவே செம்மண் கடத்தல் கும்பலை கட்டுப்ப டுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தொடங்குகிறது

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கடந்த கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக சிலசிக்கல்கள் இருப்பதால் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. இதற்கிடையில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.

    • கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
    • அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், அணை பகுதிக ளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், தொடர் மழையினாலும் கோதை யாறு, வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நேற்று அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. முக்கடல் அணை பகுதியில் 29.2 மில்லி மீட்டரும், மாம்பழத்துறை யாறில் 12.3 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 11.4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 402 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டி வருகிறது.இன்று காலை அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.54 அடியாக உள்ளது. அணைக்கு 188 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி விட்டது.

    அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை கருத்தில் கொண்டு, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    • மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தர்மபுரி, தேனி, திருவாரூர், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை முடித்துக் கொண்டு குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

    இதனால் அவருக்கு குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியை போன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் இன்று கலந்து கொண்ட நூலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

    துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, ஒன்றிய செயலாளர் மதியழகன், சுரேந்திரகுமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என் சங்கர், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவபெரு மான், அழகியபாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன், தி.மு.க. இளைஞரணி தோவாளை ஒன்றிய துணை அமைப்பாளர் எட்பெர்க், தேரேகால்புதூர் ஊராட்சி தலைவர் சோமு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வக்கீல் சிவராஜ், டாக்டர் சபி, மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், மருத்து வரணி நிர்வாகிகள் டாக்டர் வள்ளுவன், டாக்டர் சுரேஷ் பிள்ளை, டாக்டர் சுதாகர், டாக்டர் கிங்ஸ்லி செல்வக்குமார், பெர்லிங்ஸ்டன், பிரவின், ரஞ்சித் சிங், மாவட்ட அயலக அணி தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், முன்னாள் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், அகஸ்தீஸ் வரம் தெற்கு ஒன்றிய செய லாளர் பாபு, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்த குமாரி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி மாவட்ட தலைவர் ஆன்றனி ராஜ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பத்மநாபபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூ ராட்சி தலைவர் நசீர், அனுகிரஹா தொண்டு நிறுவன நிறுவனர் சதீஷ் குமார்

    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு
    • தினமும் இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கோவிலில் தொன்றுதொட்டு இரவு கோவில் நடை அடைக்கும் போது நடந்து வருகிற பூஜை ஆகும். இந்த பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். நேற்று இரவு நடந்த அத்தாழ பூஜையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அவருடன் இந்த பூஜையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • மாலை 3.30 மணிக்கு அன்புலிங்கம் வந்து பார்த்தபோது சரஸ்வதி தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.
    • இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் அன்பு லிங்கம். இவர் வீட்டு அருகில் தீப்பட்டி ஏஜென்சி தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 57). இவர் உடல் நலக்குறைவால் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று அன்புலிங்கம் தொழில் விஷயமாக வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மாலை 3.30 மணிக்கு அன்புலிங்கம் வந்து பார்த்தபோது சரஸ்வதி தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அன்புலிங்கம் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன், இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது
    • தி.மு.க.மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால் தலைமையில் இனையம் புத்தன்துறை ஊராட்சி கவுன்சிலர் தேவதாஸ் உட்பட மாற்றுக் கட்சியினை சேர்ந்த சம்பத், ரஞ்சித் சிங், சஜன், பிரதீஷ், சுஜின், அகில் மற்றும் கீழ்குளம் பேரூராட்சி 1-வது வார்டு சேம்பிளஞ்சி விளை பகுதியை சேர்ந்த சதீஷ் உட்பட பலர் அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் துரை ராஜ், மத்திக்கோடு ஊராட்சி துணை தலைவர் ஜெனோ ரெனிட்டஸ், குறும்பனை பகுதியை சேர்ந்த ஜீன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சபின் உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வில் இணைத்து கொண்ட வாலிபர்கள் இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க.மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு
    • கேரளா நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பியது

    குழித்துறை :

    திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு ஆண்டு தோறும் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாப புரத்திலிருந்து சரஸ்வதி தேவியும், வேளி மலையிலிருந்து முருகனும், சுசீந்திரத்திலிருந்து முன் உதித்த நங்கையம்மனும் ஆண்டுதோறும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கடந்த 12-ம் தேதி நவராத்திரி பவனி பத்மநாபபுர த்திலிருந்து தொடங்கியது. சரஸ்வதி தேவி அலங்கரிக்கப்பட்ட யானை மீதும், முன் உதித்த நங்கையம்மன், முருகன் விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலும் கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பக்தர்கள் வழிநெடுக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    திருவனந்தபுரம் சென்று அடைந்த விக்கிரகங்களை வைத்து, 9 நாள் நவராத்திரி பூஜை நடந்தது. அங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் தரிசனம் செய்தனர். அதன் பின்னர் ஒரு நாள் நல்லிருப்புக்கு பிறகு நேற்று முன்தினம் சுவாமி விக்ரங்கள் குமரிக்கு புறப்பட்டது. முதல் நாள் நெய்யாற்றங்கரை கிருஷ்ணன் கோவில் சென்றடைந்து அங்கு தங்கியது.

    பின்னர் 2-வது நாளான நேற்று காலை திரும்பி மாலையில் குமரி -கேரளா எல்லையான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு சுவாமி விக்ரகங்கள் மற்றும் உடைவாள், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் தந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் பவனியாக வந்த சாமி விக்கிரகங்கள், குழித்துறை மகாதேவர் கோவில் வளாகத்தில் உள்ள சாமுண்டேஸ்வரியம்மன் கோயில் வந்தடைந்தது. அதன் பின்னர் அங்கிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சுவாமி விக்கிரகங்களுக்கு ஆராட்டு நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆறாட்டுக்குப் பிறகு சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் புறப்பட்ட சுவாமி விக்ரங்களுக்கு வழி நெடுக ஏராளமான பக்தர்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்து சுவாமியை வழிபட்டனர்.

    காலை 8.30 மணிக்கு மீண்டும் பத்மநாபபுரத்துக்கு புறப்பட்டது. இந்த சுவாமி விக்ரகங்கள் மதியம் பத்மநாபபுரம் வந்தடைந்தது. அதன் பின்னர் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலை பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆலயத்திலும், குமாரகோவில் முருகன் விக்ரகம் குமாரகோவில் குமாரசாமி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் சுசீந்திரத்திலும் கொண்டு வைக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெற உள்ளது.

    இந்த சுவாமி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×