search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் தடங்கலின்றி நடந்த படகு போக்குவரத்து
    X

    கன்னியாகுமரியில் தடங்கலின்றி நடந்த படகு போக்குவரத்து

    • வடகிழக்கு பருவக்காற்று முடியும் வரை 3 மாதகாலம் சாதகமான சூழ்நிலை உருவாகும் என அதிகாரிகள் தகவல்ண
    • பவுர்ணமி, அமாவாசை நாட்களில் நிகழும் இயற்கை சீற்றங்களில் “திடீர்” மாற்றம் எதிரொலி

    கன்னியாகுமரி, அக்.30-

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்த ளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லா மல் கடல்அமை தியாக குளம்போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நாட்களில் கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படும். அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படும். பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற காலங்களில் சில நாட்களுக்கு முன்பும் சில நாட்களுக்கு பின்பும் கடல் நீர்மட்டம் உயர்வதும் தாழ்வதுமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    இதனால் இந்த பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் கன்னியாகுமரி கடலில் நிகழும் இயற்கை மாற்றங்களின் காரணமாக கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வருகிறது. ஆனால் இந்த முறை பவுர்ணமி முடிந்து 2 நாட்கள் ஆன பிறகும் கன்னியாகுமரி கடலில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை.

    இதுபற்றி தமிழ்நாடு கடல் சார் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாத காலமும் வடகிழக்கு பருவக்காற்று காலம் ஆகும். இந்த வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் கன்னியாகுமரி கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் எந்தவித இயற்கை மாற்றங்களும் நிகழ வாய்ப்பு இல்லை. ஏதாவது புயல், மழை காலங்களில் மட்டும் இயற்கை மாற்றங்கள் நிகழலாம். தற்போது வடகிழக்கு பருவக்காற்று சீசன் தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி கடலில் சாதகமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பவுர்ணமி காலமான தற்போது எந்தவித தடங்கலும் இன்றி படகு போக்குவரத்து தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. இந்த சாதகமான சூழல் வருகிற ஜனவரி மாதம் வரை 3 மாதகாலம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாத காலமும் விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு எந்தவித தடங்க ளும் இன்றி படகு போக்கு வரத்து தொடர்ச்சியாக நடைபெறும் என்று நம்புகி றோம் இ வ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    Next Story
    ×