என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
- வியாபாரி மீது வழக்கு
- போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்
குளச்சல், அக்.30-
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதி யை சேர்ந்தவர் பாலகிரு ஷ்ணன் (வயது 42). இவரது தனது தாய் நடத்தி வந்த பெட்டிக்கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து ள்ளார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்து ள்ளார். அவருக்கு மிட்டாய் கொடுத்த பாலகி ருஷ்ணன் பாலியல் தொல்லை கொடு த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார். அதனைக் கேட்டு அக்கம்ப க்கத்தினர் திரண்டதால் பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவி ட்ட அவரை தேடி வருகின்றனர்.
Next Story






