என் மலர்
கன்னியாகுமரி
- வில்சன் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார் :
குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது 66). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகளுக்கு திருமணம் ஆகி மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். வில்சன் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வில்சன் நேற்று நீண்ட நேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்தநிலையில் நேற்று இவரது வீடு வெகு நேரமாகியும், கதவு திறக்காததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உத்திரத்தில் தூக்கில் வில்சன் தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரிகளில் நடந்தது
திருவட்டார் :
சமத்துவ மக்கள் கட்சியின் குமரி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் குலசே கரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ யராஜ் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அமலன், குமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கால்டுவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செய லாளர் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ரமேஷ் ஆன்றனி, விணு, பால்ராஜ், குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநி லங்களுக்கு கனிம வளங்கள் வெட்டி கொண்டு செல் வதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். காலை, மாலை பள்ளி, கல்லூரி களுக்கு மாணவ-மாணவி கள் செல்லும் நேரங்களில் கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு அதிவேக மாக டாரஸ் லாரிகள் செல்கிறது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. மேலும் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாண விகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்ல முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாக னங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.
குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் இதுவரை பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும். கல்லூரியில் போலி இருப்பிட சான்று களுடன் படிக்கும் வெளிமாநிலத்தவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கல்லூரி நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை களை மீட்க நடவடிக்கை எடுக்க வே ண்டும். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்க ளில் கொண்டுவந்து கொட்டு வதை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.
- திற்பரப்பில் தண்ணீர் கொட்டுகிறது
- பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்வ தால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. குளச்சல் பகுதியில் நேற்று மாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய் தது. இரவும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.
இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை, முள்ளங்கினா விளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்துவரும் மழை யின் காரணமாக அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
பேச்சிப்பாறை, மாம் பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி வழி கின்றன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது.
இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையின் நீர்மட்ட மும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று மாலைக் குள் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அணை நீர்மட்டம் 42 அடி எட்டியதும் ஆற்றின் கரையோர பொதுமக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கான ஏற்பாடுகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இதனால் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். திற்பரப்பு அருவி பகுதியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடு முறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு வந்திருந்த னர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.81 அடியாக உள்ளது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 15.45 அடியாக வும், சிற்றாறு -2 அணை நீர்மட்டம் 15.55 அடியா கவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.70 அடியாகவும் உள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பல்வேறு அரசுத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி னார். சிறப்பு திட்ட செய லாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதா வது:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்கள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப் பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல் படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவை யான நிதிகள் ஆகியவை குறித்தும் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும் அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு நல்கி, மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனை வரின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள் கிறேன்.
மேலும், பள்ளிகளில் உடற்கல்வி பாடப்பிரிவு நேரத்தில் பிற பாடங்களை கற்பிக்க அனுமதி அளிக்கா மல் மாணவர்களை விளை யாட அனுமதி அளிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்விற்கு விண் ணப்பிக்கும் சதவிகி தத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தனிக்கவ னம் எடுத்து தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தி லும் இ-சேவை மையம் அமைத்து தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமின் எண்ணிக்கையை கூடுதலாக நடத்த நடவடிக்கை எடுத்து அதன்மூலம் தனியார் துறையில் வேலை நாடுநர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அங்கன் வாடி உட்கட்டமைப்பை சமூக பொறுப்பு நிதி உள்ளிட்ட பிற நிதிகளின் மூலம் மேம்படுத்த வேண்டும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று பிற மாவட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவி யர்களை கண்டறிந்து புதுமை பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பயன்பெற செய்ய வேண் டும்.செயல்படாமல் உள்ள உழவர் சந்தைகளை செயல் படுத்தவும், செயல்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சான்று அளிக்கப்பட்ட விதைகள் வழங்குதல் மற்றும் அங்கக விவசாய பரப்பினை அதிகரிக்க செய்ய வேண்டும். சான்று அளிக்கப்பட்ட நெல் விதைகளின் அளவு குறித்து விவசாயிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த
வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வரு வாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க சென்றது
- முன்னுதித்த நங்கை அம்மன் 4 ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட் டது.
நாகர்கோவில் :
திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நவராத்திரி விழாவில் பங்கேற்ப தற்காக பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி தேவியும், வேளிமலை யில் இருந்து முருகனும், சுசீந்தி ரத்தில் இருந்து முன்னுதித்தநங்கை அம்மனும் ஆண்டுதோறும் பவனி யாக கொண்டு செல்லப்படும்.
இந்த ஆண்டும் சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடந்த பூஜைக்கு பிறகு விக்ரகங்கள் திருவனந்த புரத்திலிருந்து மீண்டும் தமி ழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகம் கொண்டுவரப்பட்ட விக்ரகங்களுக்கு குமரி மாவட்ட எல்லையில் இரு மாநில போலீசார் மரியாதை அளித்த னர். பின்னர் அங்கிருந்து சாமி விக்ரகங்கள் அங்கிருந்து புறப்பட்டது. தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆலயத்திற்கும், குமாரகோவில் முருகன் விக்ரகங்கள் குமாரகோவிலுக்கும் கொண்டு செல்லப்பட்டது. முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் இன்று காலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டது. பார்வதிபுரம் நாகர்கோவில் இடலாக்குடி வழியாக சுசீந்திரம் வந்தடைந்தது.
சுசீந்திரம் கோவில் நுழைவு வாயிலில் இரு மாநில போலீசார் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன் 4 ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட் டது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
- குலுக்கலில் பெண்ணுக்கு முதல் பரிசு ஸ்கூட்டர்
- கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி வரையிலும் கூப்பன் வழங்கப்பட்டது.
திருவட்டார் :
குலசேகரம் பகுதியில் உள்ள பாரம்பரியம் மிக்க நகைகடை ராஜா ஜூவல் லர்ஸ். 4 தலைமுறை கண்ட இந்த நிறுவனம் தனது 74- ம் ஆண்டில் கால்பதித்துள்ளது. இதனை முன்னிட்டு இந்நிறுவ னம் தனது வாடிக்கையா ளர்களுக்கு குலுக்கல் பரிசு திட்டம் அறிவித்தது.
அதன் படி கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் நகை வாங்கிய வாடிக்கையா ளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி வரையிலும் கூப்பன் வழங்கப்பட்டது.
இதற்கான பரிசு குலுக்கல் குலசேகரம் ராஜா ஹேசலில் உள்ள ராஜா பெங்கட் ஹாலில் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு யமஹா ஸ்கூட்டி பேச்சிப்பாறை, கடம்ப மூடு பகுதியை சேர்ந்த பாப்பா என்பவருக்கு கிடைத் தது. 2-ம் பரிசு 5 பேருக்கு தங்க மோதிரம் வழங்கப் பட்டது. இதனை ஆண்டிஏலா விஜயகுமார், திருவரம்பு சுனிதா ராணி, பேச்சிப்பாறை தன்யா, குளச்சவிளாகம் சுரேஷ், தச்சூர் ஸ்டெல்லா ஆகியோர் பெற்றனர். 3-ம் பரிசு வைர மோதிரம். தேம்பாற அடி பகுதியை சேர்ந்த சுஜா என்பவருக்கும், 4-ம் பரிசாக 10 பேருக்கு தங்க நாணயங்களும் வழங்கப் பட்டது. மேலும் 100 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டது. பரிசு குலுக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ராஜா ஜுவல்லர்ஸ் மற்றும் ராஜா குழுமத்தின் உரிமையா ளர் தொழிலதிபர் ராஜகோ பால், இயக்குனர்கள் சார் லெட் பென்னி, டாக்டர் அருண், பொறியாளர் கிரன், சோனி ஆகியோர் செய்திருந்தனர்.
- பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிகார பூஜை
- விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு சாமி தரிச னம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
இந்த நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரக ணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சந்திர கிரகணத்தை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்பட்டது.
அதன்பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படவில்லை. அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தி னுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
சந்திர கிரகணத்தினால் பகவதி அம்மன் கோவில் நடை 9 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தது. சந்திர கிரகணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு அம்மனுக்கு பரிகாரபூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பிறகு பகவதி அம்மனுக்கு வழக்கம்போல் உள்ள பூஜைகள் தொடர்ந்து நடத்தப் பட்டது. கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிச னத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.
இதேபோல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகா னந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தான கோவிலில் சந்திர கிரகணத்தை யொட்டி மாலை 6 மணி முதல் நடை அடைக்கப்பட்டது. இந்த கோவிலில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்
- வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஜெயபாரதி மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மணிகண்ட பிரபு அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இச்சம்பவம் குறித்து மணிகண்ட பிரபு வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.
- புத்தன் அணையிலிருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து பாய்வதை பார்வையிட்டார்
- வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்பொழுது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் ரூ.296 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திட்டத்திற்கான வரைபடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். பின்னர் புத்தன் அணையிலிருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து பாய்வதை பார்வையிட்டார். பின்னர் அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
- பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பதால் போதுமான வகுப்பறைகள் இல்லாத நிலையில் பள்ளி மேலாண்மை குழு, ஊர் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
பின்னர் பள்ளியை ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி, மாணவர்களின் கல்வியை கவனத்தில் கொண்டு குமாரபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரேம்குமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் உட்பட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- நாகர்கோவிலில் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடந்தது. விழா வுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி னார். கலெக்டர் ஸ்ரீதர் வர வேற்றார்.
சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது முன்னிலை வகித்தார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 27 ஆயிரம் கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நாடே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்து சகோதரிகளுக்கு ரூ.27 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன் பெற்று உள்ளனர்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14-ந் தேதியே அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 1000 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு.
இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்ப டும் என வாக்கு றுதிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தும் போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கப்படாத வர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடு பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல் பட்டு வருகிறோம்.
மகளிர் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் எனும் உயரிய எண்ண த்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்க இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பதியாகத்தான் தற்போது இங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் 25 ஆயிரம் பேருக்கு ரூ. 27 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கியுள்ளோம்.
பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞர் அதை செய்தார். கலைஞரை தொடர்ந்து முதல்-அமைச்சரும் மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
பெண்கள் முன்னேற்றம் 3 வழிகளில் தடுக்கப்பட்டி ருக்கிறது என்று பெரியார் சொன்னார். ஒன்று, கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. 2, சட்ட ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது. 3, பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது.
இந்த 3 தடைகளை யும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலை ஏற்படும் என்று பெரியார் சொன்னார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கு வேலை. இப்படி தான் நம்முடைய சமுதாயம் ஒரு காலத்தில் இருந்தது.
இவற்றை எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்று வதற்கான திராவிட மாடல் திட்டங்கள்.
2-வதாக, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டை என்ன? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும், ஆண் பிள்ளைக்கு மட்டும் தான் அப்பா சொத்திலே உரிமை இருக்கிறது. பெண் பிள்ளைக்கு சொத்திலே உரிமை கிடையாது என்கிற நிலை தான் சட்ட ரீதியாக இருந்தது.
ஆனால், கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது தான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்..இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமைக் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் நமது தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தான்.அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பெண்களுக்கு இருக்கக் கூடிய முட்டுக்கட்டைகள் என்ன?
ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, பணத்தி ற்காக தனது அப்பாவை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண் வளர்ந்து திருமணம் ஆனதும் பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் பணத்திற்காக தனது மகனை எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படி தான் இருக்கிறது பெண்களின் நிலை.
இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டு மானால் அவர்களும் ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும். தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும்.
நாட்டிலேயே முதல்முறையாக கலைஞர் 1989-ம் ஆண்டே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கினார். கலைஞர் வழியில், திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது.
படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
இதுவரை நமது அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களி லேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.
இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்.
பெண்களுடைய உழைப்புக்கு ஓர் அண்ண னாக இருந்து முதல்-அமைச்சர் இப்போது அங்கீகாரம் கொடுத்தி ருக்கிறார். உங்களுடைய மகனாக, – சகோதரனாக இருந்து இதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.
பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். பெண்கள் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிறைய செய்தி கள் வரும். அப்படி வருகிற செய்திகள் உண்மையா? பொய்யா? என்று நீங்கள் ஆராய்ந்து அதனை மற்ற வர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்.
இப்போது, உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கி றார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், –பேரூராட்சித் தலைவர், – மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், – ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவி களில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்த சாதனையை நடத்திக் காட்டியது திராவிட மாடல் அரசு.
பெண்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித்தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டு கோளை வைக்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் சொன்னது தான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறி வுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.
அப்போது தான் உங்க ளுக்கு பிறக்கும் குழந்தை களும் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பா ர்கள். எனவே, மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும்.
ஆண்களை விட பெண்கள் தான் தங்களு டைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள்.
எனவே, பொருளா தாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டு மொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.
இங்கு வந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளுக்கும், – மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனு தவியை, முதல்-அமைச்சர் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. மாறாக சுய உதவிக் குழு சகோதரிகளின் உழைப்பிற்கான நம்பிக்கைத் தொகை யாகத் தான் பார்க்கிறார்கள்.
தி.மு.க. அரசின் சாதனை களை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும் தூதுவர்களாக மாறிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார். முடிவில் வருவாய் அதிகாரி பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.விழாவில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது.
- கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது
தக்கலை :
கோதநல்லூர் பேரூராட்சி முட்டைக்காடு சரல்விளை பகுதியில் மலைச்சிங்கம் எனப்படும் காட்டு விலங்கு சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது. இதனை பிடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினரிடம் முறையிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி பொருத்தப்பட்டு காட்டுவிலங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருந்துகோட்டை பகுதியில் கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு விலங்கால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உறுதியான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






