என் மலர்
கன்னியாகுமரி
- சேவாரத்னா விருது, இளம்சாதனையாளர் விருது, அன்னை தெரசா போன்ற விருதுகள் வாங்கியுள்ளது
- மருத்துவமனைகளிலும் தங்கி நோயாளியை கவனிப்பதற்கு பணியாளர்களை உடனே தருகின்றது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் எம்.எஸ்.ரோடு, வடசேரி பஸ் நிறுத்தம் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் அக்ஷயா ஹோம் கேர் சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றது. ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்.
சிறந்த ேசவைக்கான சேவாரத்னா விருது, இளம்சாதனையாளர் விருது, அன்னை தெரசா விருது, தங்க நட்சத்திர விருது மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விஜிலென்ஸ் கவுன்சிலர் ஆப் இந்தியா அமைப்பு சார்பாக OVCI AWARDS விருதில் அக்ஷயா ஹோம் கேர் சர்வீசஸ் நிறுவனத்துக்கு மனித நேய விருது, சிறந்த நிர்வாகத்திற்கான விருது வழங்கப்பட்டது. விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் அம்பா சிடர் டாக்டர் சத்திய கண்ணதாசன், புதுச்சேரி மாநில சபாநாயகர் எம்பலம் செல்வம் எம்.எல்.ஏ., பாண்டிச்சேரி மாநிலத்தின் ெஜயில் சூப்பிரண்டு மத்திய சிறைச்சாலை பாஸ்கரன் மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் அக்ஷயா ஹோம் கேர் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனுக்கு விருதுகளை வழங்கினர்.
வீட்டில் தங்கி பணி புரிவதற்கும், காலை முதல் மாலை வரை, மாலை முதல் காலை வரை பணிபுரி வதற்கும், நோயாளிகளை கவனிப்ப தற்கும், முதியோ ர்களை கவனிப்பதற்கும், சமையல், வீட்டு வேலை செய்வதற்கும் சிறந்த பணியாளர்களை தேர்ந்தெ டுத்து சிறந்த முறையில் ேசவை செய்து வருகின்றது. மருத்துவமனைகளிலும் தங்கி நோயாளியை கவனிப்பதற்கு பணியாளர்களை உடனே தருகின்றது.
இதன் உரிமையாளர் மணிகண்டன் கூறுகையில், ஆதரவற்றோர்கள்,கண வனால் கைவிடப்பட்ட வர்கள், விதவைகள், பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள் மற்றும் வறுமையால் வாழும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னுடைய தாயார் ராஜாமணி நினைவாக இந்த சேவையை செய்து வருகின்றேன். இலவசமாக வேலை தேவைப்படுவோர் ஆண்களும், பெண்களும் நேரில் வந்து பதிவு செய்த பின்னர் வேலை வழங்குகின்றோம்.
மேலும் பி.எஸ்.சி.நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். எங்களுக்கு வடசேரி கிளையை தவிர வேறு கிளைகள் கிடையாது. மேலும் விபரங்களுக்கு 99447 38282, 63857 71261, 63857 71262, 85263 00300 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.
- நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார்.
- 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார்
மார்த்தாண்டம் :
கருங்கல் அருகே அமைந்துள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் பொறி யாளர் ஐசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்மி பிறேமா அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்து நன்றி கூறினார். சிறப்பு விருந்தினராக ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அதில் மாண வர்கள் வேலைவாய்ப்பு களை உருவாக்கி வேலை கொடுக்கிறவர்களாக மாற வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள பல காரியங்களை கண்டுபிடிக்க வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தோல்வியை வெற்றியின் படிக்கல்லாக மாற்ற வேண்டும். இது போன்ற பல அரிய கருத்துக்களை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எடுத்து கூறினார்.
தொடர்ந்து 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார். மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற முதுகலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி அஸ்வினி, 5-வது இடம்பெற்ற முதுநிலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி திவ்யா, பல்கலை அளவில் 13-வது இடம் பெற்ற இளங்கலை சிவில் பொறி யியல் மாணவி அஜிரா ஆகியோர் பாராட்டப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
- டெங்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாள வேண்டும்?
- சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களை தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தொடங்கி வைத்தார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணியின் சிறப்பு நிகழ்ச்சியாக டெங்கு எதனால் பரவுகிறது? டெங்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாள வேண்டும்? என்னும் கருப் பொருளில் நோக்கவுரை வழங்கப்பட்டது.
அதோடு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் மையச்சிந்தனையை மாணவர்கள் உணர்ந்து டெங்கு ஒழிப்பு பற்றிய பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு விழிப்பு ணர்வு கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வானது மாண வர்கள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வும், தண்ணீரை தேங்கவிடா மல் இருக்கவும், காய்ச்சிய நீரை மட்டுமே பருகவும், சத்தான உணவுகளை உட் கொள்ளவும், கொசுக்கள் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும், போன்றவற்றை தெளிவு படுத்தும் விதமாகவும், மேலும் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களை தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மனித சவால்கள் குறித்த ஆய்வுக்காக 55 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்,
- பல்கலைக்கழகத்தில் ஆய்வு அறிக்கையைச்சமர்ப்பித்து நூலாக வெளியிடுவார்கள்.
திருவட்டார் :
மனித சவால்கள் ஆய்வுக்கான அறிமுகக் கூட்டம் குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் துணை திட்ட இயக்குனர் புதியவன் தேர்வு பெற்றவர்களுக்குப் பாராட்டு விருது வழங்கி கவுரவித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜாண்சன், அஞ்சு, முனைவர் தன்யா, சுனில்குமார், பாலகிருஷ்ணன், பிரியாஸ்ரீஜித், சிறுபுஷ்பம் டெசிஜோசப், பா.மலர் ஆனந்த்விசுவனாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள்.
மனித சவால்கள் குறித்த ஆய்வுக்காக 55 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள், இவர்கள் குமரி மாவட்ட பள்ளிகளில் இருந்து ஜீலைமாதம் தொடங்கப்பட்ட தேர்வுகளில் திருக்குறள், செய்திவாசித்தல், நூல்ஆய்வு, மரக்கன்று நடுதல் காந்திய சிந்தனை, போஸ்டர் தயாரித்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், பழங்கள்பற்றி விளக்குதல், அறிக்கைகள் எழுதுதல் கண்டுபிடிப்புகள், கண்காட்சி என பல்வேறுகட்ட தேர்வுகளுக்குப் பின்னர் மொத்த தேர்வுகளை மதிப்பீடு செய்து 55 பேர்களை ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 5 குழுக்களாகப்பிரித்து ஒரு அணிக்கு 11 பேர்வீதம் இயற்கை வளச்சவால்கள், வறுமைசவால்கள் வேளாண்மை சவால்கள் சைபர்சவால்கள், தொழில் நுட்ப சவால்கள் என ஐந்து தலைப்புகளில் ஆய்வு செய்வார்கள். ஆய்வுகளை முடித்து மே மாத இறுதியில் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு அறிக்கையைச்சமர்ப்பித்து நூலாக வெளியிடுவார்கள். பின்னர் நடைபெறும் விழாவில் இளம்விஞ்ஞானி விருது வழங்கப்படும்.
- வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- முருகன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52).
இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு ஆணை பொத்தை புத்தேரியை சேர்ந்த முருகன் (45) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டது.
இதில் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் லட்சுமி, செந்தூர் பாண்டி, ஆனந்த், வளர்மதி, விஜயன், சூரியா, மணிகண்டன், சத்யா, மற்றொரு மணிகண்டன் ஆகியோர் காயம் அடைந்ததாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளனர்.
இது குறித்து வடசேரி போலீசில் கணேசன் புகார் செய்தார். அதில், முருகன், அவரது மகன்கள் சிவா(24), கார்த்திக் (22) மற்றும் செல்வம் (26), மகேஷ் (35) மற்றும் சிலர் சேர்ந்து கம்பு, கத்தி, அரிவாள் ஆகியவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் தங்கள் குடும்பத்தினரின் 6 செல்போன்கள் மற்றும் சகோதரியின் தாலி சங்கிலி சம்பவத்தின் போது மாயமாகி விட்டதாகவும் கணேசன் புகாரில் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சிவா, அவரது சகோதரர் கார்த்திக் மற்றும் செல்வம் கைது செய்யப்பட்டனர். முருகன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- 27-ந்தேதி மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.
- பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.
நாகர்கோவில் :
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க குமரி மாவட்ட செயலாள ரும், ஆரல்வாய் மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாள ருமான சகாய திலகராஜ்- மார்சலின் தம்பதியினரின் மகன் நவீனுக்கும், தேவதாஸ்-லோசனியின் மகள் ஒபிலியாவுக்கும் கடந்த 27-ந்தேதி மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.
அதன் பின் மாலையில் நாகர்கோவில் கிருஷ்ண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி குமரி மாவட்ட டாக்பியா தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி, மாநில பொது செயலாளர் காமராஜ் பாண்டியன், மாநில தலைவர் மணிவண் ணன், மாநில பொருளாளர் சேகர், மாநில துணை தலைவர்கள் நடராஜன், மாரிமுத்து, மாநில இைண செயலாளர்கள் சேகர், செந்தில்குமார், குமரி மாவட்ட டாக்பியா மாவட்ட ெபாருளாளர் வின்சென்ட் ராஜ், மாவட்ட துணை தலைவர் சந்திரகுமார், மாவட்ட இணை செயலா ளர் ரமணி, வசந்த பிரபா, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் தக்கலை செயலாளர் பால்சுந்தரம் மற்றும் குமரி மாவட்ட டாக்பியா அனைத்து கிளை தலைவர், செயலாளர்கள், பணியாளர் கள், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கோட்டார் சவேரி யார் கோவில் ஊர் தலைவர், நிர்வாகிகள், குடும்பத்தி னர்கள், வங்கி அதிகாரிகள், மாவட்ட கூட்டுறவு துறை உதவி இயக்குனர், அரசு துறை நண்பர்கள், கோட்டார் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.
மணவிழா ஏற்பாடுகளை டாக்பியா மாவட்ட செயலா ளர் சகாய திலகராஜ், அவரது மனைவி மார்சலின், மரு மகள் ஜெனிஸ்டன் பர்னா ண்டோ, மகள் நிவேதா மற்றும் சகோதரர்கள், குடும்பத்தினர்கள் செய்தி ருந்தனர்.
- மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் புதியதாக ஒரு ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை
- ரெமோன் மனோதங்கராஜ் திறந்து வைத்தும், முதல் விற்பனையை தொடங்கியும் வைத்தார்.
திருவட்டார் :
சுருளோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் புதியதாக ஒரு ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் மனோதங்கராஜ் ஏற்பாட்டில் அந்த பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் புதிய ரேசன் கடையை சுருளகோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலாசுரேஷ் தலைமையில் வார்டு உறுப்பினர் சாந்தி முன்னிலையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் திறந்து வைத்தும், முதல் விற்பனையை தொடங்கியும் வைத்தார்.
நிகழ்ச்சியில் பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யா வுக்கு விளக்கு நிய மித்து பணிவிடை நடந்தது.
பின்னர் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவரும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பணிக்குழு பொருளாளர் சிவராஜன், செயலாளர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், துணை தலைவர்கள் மனோகரன், குமார் என்ற ராஜா, பால் ராஜ், துணை செயலாளர்கள் சிங்காரவேல், செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., சாமிதோப்பு பையன்ராஜா, அய்யா வைகுண்டசாமி கோவில் தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன், வெள்ளையன் தோப்பு ஊர் தலைவர் ரத்தின சிகாமணி, கவுரவ தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் கிருஷ்ண சாமி, ஈச்சன்விளை ஊர் கவுரவ தலைவர் கணேச மார்த்தாண்டன், கவர்குளம் தேரிவிளை ஊர் தலைவர் ராஜபாண்டியன் முன்னாள் ஊர் தலைவர் தாமோதரன் மற்றும் தங்கநடார், நம்பி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாநில அளவிலான நடன போட்டிக்கு தகுதி
- ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு திருவிழா
நாகர்கோவில் :
தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகத்தின் மூலம் "கலாஉத்சவ்" என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலைப்பண்பாட்டு திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியானது பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில், நாகர்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் மாநில அளவில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கி கவுரவித்தார்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகர் நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான நடன போட்டியில் பங்கேற்க உள்ளார். வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் அவர் மாநில அளவிலான நடன போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
- ரூ.2 லட்சம் சிக்கியது; 2 பேர் கைது
- வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்ப னையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவி ஷனலுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் தனிப்படை போலீசார் நேற்று வடசேரி, ஒழுகினசேரி பகுதியில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரிய வந்தது.
அதில் இருந்து 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்க ளிடமிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வந்ததாக காட்டாதுறை பூவின்விளை பகுதியை சேர்ந்த ரத்தின குமார் (55), சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகே சன் (28), சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ரத்தினகுமார், முருகேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட இரு வரிடமும் தடை செய்யப் பட்ட புகையிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது
- துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் டாக்டர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் கலந்துகாெண்டு பரிசுகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பாெறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
- நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டில் ரத்தின தங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு எறும்பு காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணியாற்றி வருகின்ற னர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வ நாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்க லம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடு வது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளை யடிக் கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடி யாக அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரத்தின தங்கத்திற்கு தகவல் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா ளரின் கணவர் ராம்கோபால் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்த னர். பெட்ரோல் பங்கில் திருடு வதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.






