குண்டும், குழியுமாக காணப்படும் குழித்துறை-ஆலஞ்சோலை சாலையை சீரமைக்க வேண்டும்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கைபோக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
குண்டும், குழியுமாக காணப்படும் குழித்துறை-ஆலஞ்சோலை சாலையை சீரமைக்க வேண்டும்
Published on

அருமனை :

குழித்துறை-ஆலஞ் சோலை சாலை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை ஆலஞ்சோலை முதல் அருமனை மேலத் தெரு வரை, புண்ணியம் முதல் கழுவன்திட்டை வரை உள்ள சாலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் மேலத்தெரு முதல் புண்ணியம் சந்திப்பு வரை சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகின்றது.

இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் சாலையின் இருபுற மும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சாலை குறுகி கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அருமனை மைய பகுதியில் அனைத்து அரசு அலுவல கங்கள், வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், கன ரக வாகனங்கள் (குவாரி) மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தற்போது சாலை குண்டும் குழிகளாக சேதமாகி உள்ளது.

எனவே இச்சாலையை உடனே சீர்செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) அருமனை வட்டா ரக்குழு சார்பாக நெடுஞ் சாலைதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்துவதாகும் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com