என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி ரைஸ் அமைப்பு"

    • அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
    • கனிம வளங்கள் நிறைந்த நாடு. உலகளவில் முதலீட்டாளர்களை வரவேற்கும் நாடாக உள்ளது.

    நாகர்கோவில் :

    தி ரைஸ் அமைப்பின் இயக்குனர் ஜகத் கஸ்பர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தி ரைஸ் அமைப்பின் சார்பில் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் மலேசியா தலைநகர் கோலம்பூரில் நடைபெற்ற மாநாட்டில் 430 தொழில் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இதைத்தொடர்ந்து 12-வது உலக தமிழ் தொழில் மற்றும் தொழிலாளர்கள் மாநாடு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வருகிற 24, 25, 26-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் 35 நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், திறனாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாட்டில் 500 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ஓமன் நாட்டின் நான்கு மூத்த அமைச்சர்களும் பங்கு கொள்கிறார்கள்.

    தொலைத்தொடர்பு, ஐடி துறை, மீன்வளத்துறை, வேளாண் துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாடு தமிழ் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும். கத்தார், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் இருந்தும் தொழில் அதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாநாடு ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும். ஓமன் நாடு அரசு அந்த நாட்டு குடிமக்களை சிறு தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. அதற்கு பேருதவிகளையும் அந்த நாட்டு குடிமக்களுக்கு செய்கிறது. ஆனால் என்னென்ன தொழில் செய்ய முடியும் என்கின்ற அனுபவம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஆரம்ப நிலையில் தான் அந்த நாட்டில் உள்ளது. ஓமன் நாட்டின் நிதி வளங்களோடு இருக்கக்கூடிய தொழில்அதிபர்களையும் இணைக்கும் முயற்சியாக தான் இந்த மாநாடு அமையும். கனிம வளங்கள் நிறைந்த நாடு. உலகளவில் முதலீட்டாளர்களை வரவேற்கும் நாடாக உள்ளது.

    இந்த மாநாடு நடை பெறுவதன் மூலமாக உலக முதலீட்டாளர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓமன் நாட்டை மையமாக கொண்டு மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்கள் ஆகியவற்றிற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஓமன் நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவது மிகவும் எளிமை யாக்கப்பட் டுள்ளது. வருமான வரி இந்த நாட்டில் இல்லை.

    இந்தியா வில் இருக்கின்ற ஜி.எஸ்.டி. வரி என்பது அங்கு மதிப்பு கூட்டு வரியாக இருக்கிறது. மிக அதிகபட்சமாக 5 சதவீதம் மட்டுமே உள்ளது. நாம் ஈட்டுகின்ற லாபத்தை முழுமையாக நம் தாய் நாட்டிற்கு அல்லது நாம் குடிபெயர விரும்புகின்ற நாட்டிற்கோ எடுத்து செல்ல உரிமையும், வாய்ப்பையும் அந்த நாட்டு அரசு வழங்குகின்றது.

    ஓமன் நாட்டில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இந்த மாநாடு ஓமன்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×