என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில், அக்.30-
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டு காந்திபுரம் மெயின்ரோடு, பெட்ரோல் பல்க் அருகில் உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகர செயலாளர் ஆனந்த், ஜீவா, அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராஜன், சரவணன், வட்ட செயலாளர்கள் ரவி, விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






