என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாணியேல் (வயது 49) கூலி தொழிலாளி, இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை திருக்கனங்கூர் பகுதியில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் தாணியேல் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விக்ரமன் (வயது 46).

    இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருக்குமார் பாலச்சந்திரன் பேபி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த திருக்குமார், பாலச்சந்திரன் மற்றும் பேபி ஆகிய 3 பேரும் சேர்ந்து விக்ரமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து விக்ரமன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தகராறின் போது காணாமல் போன விக்ரமனின் 5 பவுன் தங்கச் சங்கிலியையும் தேடி வருகின்றனர்.
    சாலை மறியலில் ஈடுபட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது23). இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு பால் பூத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ரமேஷ் பால்கேன்களை மினி லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு இடையூறாக நின்ற அதே ஊரைச் சேர்ந்த சிரஞ்சீவி உள்ளிட்ட நபர்களை சற்று தள்ளி நிற்குமாறு ரமேஷ் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரமேஷை தாக்கினார். இதை விலக்க வந்த ரமேஷின் அண்ணி சூர்யாவையும் அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டித்து ரமேஷின் ஆதரவாளர்கள் செல்லம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சியில் 11-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மேற்கு உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மவுலி தேவி (வயது 38). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
     
    இவருக்கும் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அன்பரசன் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் மவுலி தேவியின் 2 பெண் குழந்தைகளும் தனது பாட்டி புவனேஸ்வரி வீட்டில் தங்கி படித்துவந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு மூத்த மகளான ஹரிணி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மேலும் ஹரிணி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம்  வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மவுலி தேவியிடம் கழிவறையில் ஹரிணி வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக உறவினர் ஒருவர் போன் செய்து கூறியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மவுலி தேவி தனது மகள் ஹரிணி சாவில் சந்தேகம் இருப்பதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணயில் மாணவி கழிவறைக்கு சென்ற போது வலிப்பு வந்து வழுக்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து படித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த பிரிதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் மணிகண்டன்(வயது 27) என்பவர் திடீரென வீட்டின் உள்ளே புகுந்த மாணவியின் வாயில் துணியை அமுக்கி வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பெற்றோருக்கு பயந்து நடந்த சம்பவத்தை மாணவி அவரது பெற்றோரிடம் கூறவில்லை.

    பின்னர் மறுநாளும் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மணிகண்டன் அருகில் உள்ள மாட்டுகொட்டகைக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இதுபற்றி மாணவி அவரது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள கூட்டுறவு பால் பூத்தில் அதே பகுதியை சேர்ந்த பட்டாபிராமன் மகன் ரமேஷ்(வயது 23) வேலை பார்த்து வந்தார். இவர் சம்பத்தன்று மாலை பணியில் இருந்தபோது பால்கேன் ஏற்ற மினி லாரிக்கு இடையூறாக நின்ற அதே ஊரைச் சேர்ந்தவர்களை சற்று தள்ளி நிற்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே ஊரை சேர்ந்த சிரஞ்சீவி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரமேசையும், விலக்க வந்த இவரது அண்ணி சூர்யாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதை கண்டித்து ரமேசின் ஆதரவாளர்கள் செல்லம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கண்டாச்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    கண்டாச்சிபுரத்தை அடுத்த காரணை பஸ் நிறுத்தம் அருகே, கண்டாச்சிபுரம் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் இருந்னர். அப்போது மதுபாட்டில் விற்ற அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அய்யப்பன்(வயது 31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஏரிக்கரை பகுதியில் மது பாட்டில் விற்ற வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் முரளி(30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(வயது 45). தொழிலாளியான இவர் மது குடிக்கம் பழக்கம் உடையவர். இதனால் அவரது மனைவி சுமதி(39) கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் மணலூர்பேட்டையில் வசித்து வந்தார். ராமு அவ்வப்போது தனது மகள் பிரியதர்ஷினியை பார்த்து செல்வார். வழக்கம்போல் கடந்த 14-ந் தேதி மகளை பார்த்து விட்டு மீண்டும் மாம்பழப்பட்டு செல்வதாக கூறி சென்ற ராமு மணலூர்பேட்டை சந்தமேடு பகுதியில் இறந்து கிடந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
    கள்ளக்குறிச்சி:

    திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். அவரது மனைவி கற்பகம் (வயது 48) பல் டாக்டர். இவர்களது மகள் கவின் மலர் (வயது 20) பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

    நேற்று இரவு டாக்டர் கற்பகம், மகள் கவின்மலர் தனது தாயார் டாக்டர் உமாராணி (81) ஆகியோரை அழைத்து காரில் திருப்பூரில் இருந்து விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். காரை கற்பகம் ஓட்டினார்.

    இந்த கார் கள்ளக்குறிச்சி அருகே பெரியமாம்பட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி காவலாளி சக்கரை (65) மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டாக்டர் கற்பகம், கவின் மலர், உமா ராணி, காவலாளி சக்கரை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமாராணி, சக்கரை ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த டாக்டர் கற்பகம், கவின்மலர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணன், தங்கை இருவரும் உயிரிழந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூபேட்டை அருகே செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மகன் மணிகண்டன். (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரது சித்தி மகள் உதயலட்சுமி. (19).

    நேற்று இரவு மணிக்கண்டன் மோட்டார் சைக்கிளில் உதயலட்சுமியை அழைத்து கொண்டு செங்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார்.

    டோல்கேட் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே உதயலட்சுமி இறந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் போலீசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். (வயது 35). இவர் செங்கல் அறுக்கும் தொழிலாளி. அவரது மனைவி பேபி. (33). இவர்களுக்கு சாரதி (14), சத்யா (11), ஆகிய மகள்களும், கார்த்தி(9) என்ற மகனும் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கணவன் மனைவி இருவரும் திருக்கோவிலூருக்கு வந்து பொங்கல் மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புது துணிகள் வாங்கி சென்றனர்.

    நேற்று இரவு வழக்கம்போல் மனைவி குழந்தைகளுடன் படுக்கைக்கு சென்ற லோகநாதன் திடீரென இரவு 11 மணி அளவில் தனது மனைவியை மட்டும் தனது வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

    அப்போது லோகநாதன் தன் மனைவியிடம் கடந்த 3 மாதங்களாக உனது நடத்தை சரியில்லை என திட்டி இருக்கிறார். இதனால் இருவருக்குமான வாய்த்தகராறு முற்றியது.

    ஆத்திரம் அடைந்த தொழிலாளி லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். பின்னர் கோபம் கொப்பளிக்க மனைவியின் உடலை கத்தியால் கிழித்தார். இதில் பேபி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

    இதனை பார்த்த லோகநாதன் தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் வீட்டின் அருகிலுள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கவனித்து விட்ட லோகநாதனின் தாய் உடனே ஓடிவந்து சத்தம்போட்டு அக்கம்பக்கம் உள்ளவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். உடனே வீட்டில் தூங்கிய குழந்தைகளும் எழுந்து கதறி அழுதனர். .

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட லோகநாதனை காப்பாற்றினர்.

    அதன் பிறகுதான் அவரது மனைவி பேபியை கொலை செய்த விவரம் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை தெரிந்து விரைந்துவந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு போராடிய லோகநாதன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமரன் தலைமையில் மணலூர்பேட்டை முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ந் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவில் மற்றும் இதர சமய திருவிழாக்கள் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் மணலூர்பேட்டையில் 18-ந் தேதி நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழா நடைபெறாது என உறுதியானது.

    அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமரன் தலைமையில் மணலூர்பேட்டை முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், திருக்கோவிலூர் நிலைய தீயணைப்பு அலுவலர் இளங்கோவன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர்கள், திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் செயல் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு தரப்பினரும், அதிமுக நகர செயலாளர் ரமேஷ், பாமக நகர செயலாளர் கோவிந்தராஜ், திமுக நகர செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ், திமுக வக்கீல்கள் சையத் அலி, பாலாஜிபூபதி, நிர்வாகிகள் அண்ணாதுரை, சரவணன் சுப்பிரமணி, மண்ணு, மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய தாசில்தார் குமரன் தமிழக அரசின் உத்தரவுப்படி ஆற்றுத்திருவிழா நடைபெறுவதை அனுமதிக்க முடியாது என கூறினார்.

    அப்போது மணலூர்பேட்டை நகர பொதுமக்கள் சார்பில் தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ் பேசியதாவது:-

    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ள தடை உத்தரவை நாங்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம் திருவண்ணாமலையிலிருந்து பாரம்பரியமாக ஆண்டுதோறும் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றுக்கு வருகைதந்து ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு செல்லும் வகையில் அருணாச்சலேஸ்வரர் சாமி வருவதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    அருணாச்சலேஸ்வரர் வரும்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் சாமிக்கு படையல் செய்வதையோ, தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையோ தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணி வழங்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டையில் ஆண்டாண்டு காலமாக வருவதை நிறுத்தாமல் வருகை புரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கருத்தை கேட்டறிந்த தாசில்தார் குமரன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து முடிவு அறிவிக்கப்படும் என அறிவித்தார்.
    ×