என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளத்தில் கவிழ்ந்த கார் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் காட்சி.
  X
  பள்ளத்தில் கவிழ்ந்த கார் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் காட்சி.

  பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- பெண் டாக்டர் உள்பட 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் டாக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
  கள்ளக்குறிச்சி:

  திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். அவரது மனைவி கற்பகம் (வயது 48) பல் டாக்டர். இவர்களது மகள் கவின் மலர் (வயது 20) பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

  நேற்று இரவு டாக்டர் கற்பகம், மகள் கவின்மலர் தனது தாயார் டாக்டர் உமாராணி (81) ஆகியோரை அழைத்து காரில் திருப்பூரில் இருந்து விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். காரை கற்பகம் ஓட்டினார்.

  இந்த கார் கள்ளக்குறிச்சி அருகே பெரியமாம்பட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி காவலாளி சக்கரை (65) மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

  இந்த விபத்தில் டாக்டர் கற்பகம், கவின் மலர், உமா ராணி, காவலாளி சக்கரை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமாராணி, சக்கரை ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  விபத்தில் காயம் அடைந்த டாக்டர் கற்பகம், கவின்மலர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  Next Story
  ×