என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக சங்கராபுரம் வட்டாரத்திற்கு விதைப்பண்ணை அமைக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டது. நெல் 34 ஏக்கர், கம்பு 4 ஏக்கர், மணிலா 20 ஏக்கர், உளுந்து 85 ஏக்கர் எள் 3 ஏக்கர் பரப்பளவில் இலக்கு பிரித்து அளிக்கப்பட்டு, சோழம்பட்டு, நெடுமானூர், அரசம்பட்டு, பழையனூர், செம்பராம்பட்டு போன்ற கிராமங்களில் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட விதை சான்று உதவி இயக்குநர் கதிரேசன் நெடுமானூர் முத்துசாமிஎன்பவரின் எள் ஆதார நிலை விதைப்பண்ணை வயலை ஆய்வு செய்தார்.
அதே கிராமத்தில் நடராஜன், ஜெயவர்மா ஆகியோர் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த நெல் விதை வயல்களை ஆய்வு செய்தார். விதைபண்ணை வயல்களை ஆய்வு செய்த போது எள் மற்றும் நெல் விதைப்பண்ணைகளில் தரமான விதை உற்பத்தி செய்தல், கலவண் நீக்குதல் போன்ற வழிகாட்டுதல்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல், தேவையான பயிற்பாதுகாப்பு மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது உளுந்தூர்பேட்டை விதைச்சான்று அலுவலர் செல்வமணி சங்கராபுரம் உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை ஆகியோர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் மதுரை மாவட்டம் மேலூர் ஆலம்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி(வயது 40) என்பவர் மருந்து கடை நடத்தி வந்தார்.
இந்த மருந்து கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி(25) என்பவருக்கு கருக்கலைப்பு செய்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துக்குமாரி, அவரது உதவியாளர் அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மனைவி கவிதா(35) ஆகிய 2 பேரையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முத்துக்குமாரி, கவிதா ஆகியோர் தொடர் குற்ற செயலில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கடலூர் சிறையில் இருந்த முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்து வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.
கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதான 2 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மகள் பிரியா(வயது 24). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். எனவே பிரியா தனது பாட்டி ஆதிலட்சுமி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த வேலுமணி. அவரது மகன் சிவகுமார்(26) இவர் பிரியாவை கடந்த 4 வருடமாக காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் கர்ப்பம் அடைந்த பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்திய போது சிவகுமார் மறுத்துவிட்டார்.
பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட சிவகுமாரும், அவரது குடும்பத்தினரும் பிரியாவை அழைத்து கருவை கலைக்க சொல்லி மிரட்டினர்.
இது குறித்து பிரியா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து சிவகுமாருக்கும் பிரியாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அன்று அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
பின்னர் 2 நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் பிரியாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அங்கிருந்து சென்ற சிவகுமார் மீண்டும் திரும்பி வரவில்லை.
சுமார் ஒருமாதத்துக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலன் இன்றி கடந்த 19-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
எனவே பிரியா சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர் சுப்பிரமணி கொடுத்தார். அதன்பேரில் சிவகுமார், அவரது தாய் சாந்தி, தம்பி குபேந்திரன் உள்பட 7 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரா( வயது 19).
இவர் டிராக்டர் டிரைவராக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சவேரியார் பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சென்றபோது வீராவின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக வடபொன் பரப்பி போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொட ர்ந்து போலீசார் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த குமார்( வயது 40) என்பதும், இவர் மீன்பிடிக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று குமார் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இறந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தியாகராஜபுரம் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 42), மொட்டையம்மாள் (58) ஆகியோர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதைபார்த்த போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் இரு தரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கும்பலை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தந்த புகாரின்பேரில் இம்தியாஸ், அப்துல்கனி, முஸ்தபா, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல எதிர் தரப்பில் அப்துல்கனி கொடுத்த புகாரின்பேரில் கார்த்திகேயன், ஆறுமுகம், எழில், தமிழ்ச்செல்வன், சூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இம்தியாஸ், அப்துல்கனி, ஆறுமுகம், எழில், தமிழ்ச்செல்வன், சூர்யா ஆகியோரை கைது செய்தனர். கைதான அப்துல்கனி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32) இவர் இரவு சுமார் 10 மணி அளவில் திருக்கோவிலூர் அருகே உள்ள சட கட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வெங்கடேசன் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு கத்தியைக் காட்டி அவரிடமிருந்த ரூபாய் ஆயிரம் பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மணலூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பெங்களூர் ஜெய் நகரைச் சேர்ந்த சுனில் குமார் (21), இவரது தம்பி சுரேஷ் (19) மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் சரகம் கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (20) ஆகியோர் என தெரியவந்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் இரு சக்கர வாகனத்தில் தப்பிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்த நபர்களிடமிருந்து இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், மனைவி சுகந்தி (வயது 27), நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி வந்தது.
எனவே அவர் ஈய்யனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த மருத்துவர் சுகந்தியை பரிசோதனை செய்தார். தொடர்ந்து மருத்துவர்கள் சுகந்தியை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை ஓட்டுநர் சரவணன் ஓட்டிச்சென்றார். அப்போது முடியனூர் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சுகந்தி பிரசவ வலியால் துடித்தார்.
அப்போது ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் சரவணன் பிரசவம் பார்த்தார். இதில் சுகந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தாயும்,சேயும் நலமுடன் உள்ளனர். சுகந்திக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகப்பிள்ளை மகன் ஸ்டாலின் (வயது 35).
இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின், சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று, ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
சோழம்பட்டு கூட்டுரோடு அருகே வந்தபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற கார் ஸ்டாலின் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






