என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    தியாகதுருகம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே ஆம்புலன்சில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், மனைவி சுகந்தி (வயது 27), நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி வந்தது.

    எனவே அவர் ஈய்யனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த மருத்துவர் சுகந்தியை பரிசோதனை செய்தார். தொடர்ந்து மருத்துவர்கள் சுகந்தியை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை ஓட்டுநர் சரவணன் ஓட்டிச்சென்றார். அப்போது முடியனூர் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சுகந்தி பிரசவ வலியால் துடித்தார்.

    அப்போது ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் சரவணன் பிரசவம் பார்த்தார். இதில் சுகந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தாயும்,சேயும் நலமுடன் உள்ளனர். சுகந்திக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    Next Story
    ×