என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
சங்கராபுரம் அருகே தறிகெட்டு ஓடிய டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தறிகெட்டு ஓடிய டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரா( வயது 19).
இவர் டிராக்டர் டிரைவராக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சவேரியார் பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சென்றபோது வீராவின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story