என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அத்திவரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் திரண்டதால் காஞ்சீபுரம் திக்குமுக்காடியது.
    உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    அத்திவரதர் நேற்று இளம் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருந்ததால் காஞ்சீபுரம் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    அத்திவரதரை நேற்று மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் தரிசித்ததாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆன்ந்த் மற்றும் பலர் நேற்று அத்திவரதரை தரிசித்தனர்.

    அத்திவரதரை தரிசித்த பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தில் அத்திவரதர் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொண்ட பலர் இன்று வெளிப்படையாக அத்திவரதரை தரிசிக்கின்றனர். இதை விமர்சனம் செய்யவில்லை, வரவேற்கிறேன். இத்தகைய மாறுதல் தான் தமிழகத்திற்கு வரவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

    ஆன்மிகம் வளர்ந்தால் தான் சேவை மனப்பான்மை பரந்து விரிந்து அருளுடைய பூமியாக தமிழகம் மாறும். மற்ற மாநிலங்களில் இருந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்திவரதர் விழா ஏற்பாடுகள் முதலில் சுணக்கமாக இருந்தது, ஆனால் இன்று பல குறைகள் களையப்பட்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர். அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றினர். நாங்கள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இருந்ததால் பிரசாரத்துக்கு செல்லவில்லை.

    தி.மு.க.வினர் இதற்கு முன்னர் மறைந்து ஆன்மிகத்தை கடைபிடித்தார்கள். தற்போது ஒளிவுமறைவு இல்லாமல் கடை பிடிக்கிறார்கள். தி.மு.க. சகோதரர்கள் தங்கள் வீட்டு திருமணங்களை நாள் பார்த்து தான் செய்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூட நாத்திகவாதி கிடையாது.

    ஸ்டாலின் கூட நாத்திகவாதி கிடையாது. அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் அவருடைய தாய் மற்றும் மனைவியை வைத்து இறைநம்பிக்கையை பூர்த்தி செய்து கொள்கிறார். அதை நான் வரவேற்கிறேன். ஸ்டாலினும் அத்திவரதரை நேரில் வந்து தரிசிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று காலை குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார். அவர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அத்தி வரதரை வழிபட்டார்.

    காஞ்சிபுரம்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று காலை குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார். அவர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அத்தி வரதரை வழிபட்டார்.

    பின்னர் கதிர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    40 வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை வழிபட வந்தேன். தேர்தல் வெற்றிக்காக வழிபட வரவில்லை. தி.மு.க. ஆன்மீக பாதையில் செல்லவில்லை. ஏற்கனவே பயணித்த பாதையில்தான் செல்கிறது.

    பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் கனிமொழியால் வேலூர் தொகுதியில் பிரசாரத்துக்கு வரமுடியவில்லை. எனினும் அவர் அன்றாட நிகழ்வுகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு அறிந்து வந்தார். வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரகடத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    நெல்லையை சேர்ந்த ரிதீஷ், அரியலூரை சேர்ந்த சந்திரஜீத், சிவகங்கையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் படப்பையில் வாடகைக்கு வீடுஎடுத்து தங்கி ஒரடகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    நேற்றுமாலை வேலை முடிந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஒரகடத்தில் இருந்து படப்பை நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரிதீஷ்,சந்திரஜித் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வினோத்குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை தனியார் ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக பலியானார். இது இறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடிவருகின்றனர்.

    ஆடிப்பூரத்தையொட்டி அத்திவரதர் தரிசனம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 6 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்தார்.
    காஞ்சீபுரம்:

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். கடந்த மாதம் 31 நாட்களும் சயனகோலத்தில் காட்சியளித்தார். கடந்த 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நேற்று பச்சை, காவி நிற பட்டாடையில் செண்பகபூ மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் 6 மணி நேரம் வரை காத்திருந்து தரிசித்தனர். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் தனிவரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

    வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்குமார் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    ஆடிப்பூரத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் சேவையில் பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்கு இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆண்டாளும் பெருமாளும் கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலை சென்றடைவர். இதனால் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும். 8 மணிக்கு பிறகு அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக சபாநாயகர் தனபால் அத்திவரதரை தரிசித்தார். நேற்று அத்திவரதரை 1½ லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.
    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதரை தரிசிக்க இன்று காலை சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் குவிந்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து 31 நாட்கள் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) இருந்த அத்திவரதர் நேற்று முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

    தினந்தோறும் சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதுவரை 48 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை வழிபட்டு உள்ளனர்.

    நேற்று அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் முதல் நாள் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்தி வரதரை வழிபட குவிந்தனர். இதனால் கோவில் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து பக்தர்களை அனுப்பி வருகிறார்கள்.

    நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினங்களில் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க இன்றே அத்திவரதரை வழிபட வந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இன்று பிற்பகலுக்கு பின்னர் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முதல் சுமார் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் அவர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    விழாவின் 33-வது நாளான இன்று அத்திவரதர் பச்சை, காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். செண்பகப்பூ மாலையில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விடுதலை சிறுத்தை பிரமுகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த புக்கத்தூர் பழைய காலனியை சேர்ந்தவர் கலை மூர்த்தி என்ற கலைவடிவன் (வயது50). விடுதலை சிறுத்தை கட்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.

    கடந்த 28-ந்தேதி இரவு அவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீர் என்று மோட்டார் சைக்கிளை நிறுத்தும் போது தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த கலைவடிவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவடிவன் இறந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் மண்டபம் சீல் வைக்க தி.மு.க.வே காரணம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் என்று வரும் போது எதிர்க்கட்சி, ஆளுங் கட்சி எல்லாம் ஒன்றுதான். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபம் பூட்டப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறவில்லை என்றே தெரிகிறது.

    முக ஸ்டாலின்

     

    தேர்தல் நேரத்தில் யாராக இருந்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். அப்படி நடக்காததால் வழக்கு போடப்பட்டுள்ளது.

    வேலூரில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதற்கும், தாமதமாக தேர்தல் நடப்பதற்கும் தி.மு.க.வே காரணம். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரத்தில் அத்திவரதரை சயன கோலத்தில் இதுவரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன(படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக சென்னை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் காஞ்சீபுரம் திக்குமுக்காடி வருகிறது.

    31-வது நாளான நேற்று அத்திவரதர், மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

    அத்திவரதர், பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளிப்பது நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று (வியாழக்கிழமை) முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    இதற்காக நேற்று மதியம் 12 மணிக்கு பிறகு இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே இலவச தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியம் 12 மணிக்கு பிறகு இலவச தரிசனத்தில் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதேபோல் முக்கிய பிரமுகர்களுக்கான வரிசையிலும் மதியம் 3 மணிக்கு பிறகு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை நின்ற கோலத்தில் மாற்றுவதற்கு வசதியாக நேற்று மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பக்தர்கள் 6 மணிநேரம் வரை வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான 31 நாட்களில் சயன கோலத்தில் இருந்த அத்திவரதரை மொத்தம் 48 லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

    இன்று (வியாழக்கிழமை) அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் இதுவரை தரிசனம் செய்யாத பக்தர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே சயன கோலத்தில் தரிசனம் செய்த பக்தர்களும் நின்ற கோலத்தில் அத்திவரதரை காண்பதற்காக வருவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அத்திவரதரை தரிசனம் செய்தார். அவர் அத்திவரதருக்கு மஞ்சள் பட்டாடை, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, ரோஜா, துளசி மாலை போன்றவற்றை தட்டில் வைத்து வழங்கினார்.

    முன்னதாக காஞ்சீபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொன்னாடை அணிவித்து வரவேற்றார். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், வடகால் சவரிங்கம் உள்பட பலர் வரவேற்றனர்.

    நேற்று அத்திவரதரை புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தரிசனம் செய்தார். பின்னர் அவர் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தார். பல்லவர்களின் வரலாறுகள் குறித்து தொல்லியல் துறையினர் அவருக்கு எடுத்து கூறி விளக்கினர்.

    தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்ற கிரண்பெடி அங்கு சயன நிலையில் காட்சி தரும் தலசயன பெருமாளை வணங்கினார்.
    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர், நாளை முதல் நின்ற நிலையில் அருள்பாலிக்க உள்ளார். ஆகஸ்டு 17-ந் தேதி வரை அவர் காட்சி அளிக்கிறார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தினந்தோறும் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இதுவரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) காட்சி அளித்த அத்தி வரதர், நாளை முதல் (வியாழக்கிழமை) நின்ற நிலையில் அருள்பாலிக்க உள்ளார். ஆகஸ்டு 17-ந் தேதி வரை அவர் காட்சி அளிக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் பக்தர்களின் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பொது தரிசன பாதையான கோவிலின் கிழக்கு வாசல் இன்று மதியம் 12 மணியுடன் மூடப்பட்டது.

    இதேபோல் முக்கிய பிரமுகர்கள் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 3 மணிக்கு பின்னர் முக்கிய பிரமுகர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கோவிலுக்குள் இருந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அவர்கள் வெளியே வந்ததும் மாலை 5 மணிக்கு பின்னர் சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர் சிலைக்கு பூஜைகள் செய்து நின்ற கோலத்தில் வைக்கிறார்கள். சிறப்பு அலங்காரம், பூஜைகள் முடிய சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் ஆகும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாளை காலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல் நாளில் தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள லாட்ஜூகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி விட்டன.

    கோவில் வளாகத்திலும் திரளான பக்தர்கள் காத்து கிடக்கிறார்கள். இதனால் கோவில் முழுவதும் மனித தலைகளாக காட்சியளிக்கிறது. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்ய உள்ளனர்.

    விழாவின் 31-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


    விழாவின் 31-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசித்தார்.

    இதன்பிறகு அடுத்த 40 ஆண்டுகள் கழித்து 2059-ம் ஆண்டில் தான் அத்திவரதரை சயன கோலத்தில் காண முடியும் என்பதால் காஞ்சிபுரம் நகரில் இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் குவிந்தனர்.

    நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர்.

    நாளை வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோவிலில் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கூட்ட நெரிசலை தடுக்க குறிப்பிட்ட அளவில் பக்தர்களை நிறுத்தி, நிறுத்தி கோவிலுக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
    பா.ஜனதா கொள்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜா இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் தற்போது பல சோதனைகள், சவால்கள் நிரம்பிய அரசியல் சூழ்நிலையில் என்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    நெருக்கடியான கால கட்டத்தில் பா.ஜனதா அரசு பின்பற்றும் கொள்கைகள் நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளது. மதவெறி அரசியலை முறியடித்து தமிழக மக்கள் வாக்களித்தார்கள். மதவெறி அரசியல் மூலம் மக்களை பிளவுப்படுத்தியும், பொருளாதார நிலையை சீர்குலைய செய்யும் பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட வேண்டி உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், கட்சி நடத்தும் போராட்டங்களுக்கும் தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஏர்-இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் நாளை தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம் :

    காஞ்சீபுரத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் ‘வி.வி.ஐ.பி. பாஸ்’ வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை. டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    கலெக்டர் பொன்னையா

    1-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும்போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் மேலும் 3-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இவ்வாறு கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
    கீழ்கட்டளையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    கீழ்கட்டளை சக்தி நகரை சேர்ந்தவர் பிச்சாண்டி (41). கட்டிட தொழிலாளி. நேற்று மதியம் இவர் ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். உடனே அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.

    உடனே அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரும் மடிப்பாக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    ×