என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சோமு. இவர், மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் ஜெகத்பிரியன் (9). 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று திருப்புட்குழி அருகே உள்ள தாமரைக்குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜெகத்பிரியன், சுதன் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார், குளத்தில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகேயுள்ள முசரவாக்கம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மகன் ஜெகத்பிரியன் (8). அதே பகுதியில் ரோட்டுத்தெரு சோமு என்பவரின் மகன் சுஜன் (12).

    இந்த இரண்டு சிறுவர்களும் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,938 ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,938 ஆக உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் கொரோனாவிலிருந்து 7,675 பேர் குணமடைந்த நிலையில் 2,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரியவரிடம் ஒப்படைத்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் கடந்த 1-ந்தேதி கீழம்பியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்றார், அப்போது, அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியாவிடம் ஒப்படைத்தார்.

    அவரது உத்தரவின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில்், அந்த பணம் கீழம்பியை சேர்ந்த வரதராஜன் என்பவருடையது என்பது தெரியவந்தது. இது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்த அவரிடம் ரூ.10 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். அப்போது வங்கி அதிகாரி உடன் இருந்தார்.
    ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால்குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சம்பந்தம் நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலங்கள் மற்றும் திருமணங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம். இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அலுவலகத்தை மூடாமல் வழக்கம்போல் நேற்றும் அலுவலகம் செயல்பட்டது.

    இதனை அறியாமல் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய டோக்கன்கள் வாங்கியும், பணத்தை செலுத்தியும் இருந்தனர். இதனை அறிந்த பேரூராட்சி அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அலுவலகத்தை இழுத்து மூடினார்கள்.

    மீண்டும் நாளை (வியாழக்கிழமை) பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பயம் எதுவும் இல்லாமலும், சமூக விலகல் கடைபிடிக்காமலும் பத்திரப்பதிவு அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வண்டலூர் அருகே பத்து சக்கரங்கள் கொண்ட அதிக எடை கொண்ட லாரி சாலையில் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.
    வண்டலூர்:

    வண்டலூர் அருகே பத்து சக்கரங்கள் கொண்ட அதிக எடை கொண்ட லாரி, சாலையில் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    தாம்பரம்- வண்டலூர்- மண்ணிவாக்கம் ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும், மண்ணிவாக்கம் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில், ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அதிநவீன கிரேன் கொண்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
    மாங்காடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட மேற்பார்வையாளர் பலியானார்.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, லட்சுமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 37). கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சர்வீஸ் சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த செல்வராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே தந்தை கண் எதிரே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்.. கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுஜித்வேலன் (வயது 8). இவன், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வெங்கடேஷ் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் குளிக்கச்சென்றார்.

    சுஜித்வேலனை குளிக்க வைத்து கிணற்றின் கரையில் நிறுத்தி விட்டு வெங்கடேஷ் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுஜித்வேலன் கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதை பார்த்ததும் அவரது தந்தை வெங்கடேஷ், மகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் சுஜித்வேலன் கிணற்றில் மூழ்கி விட்டான்.

    இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அதிகாரி அருள் ஜோதி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஜித்வேலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 213 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,998 ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 213 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,998 ஆக உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் 6,229 பேர் குணமடைந்துள்ள நிலையில் 117 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    காஞ்சிபுரம் நெல்லுக்கார சாலையில் முழு ஊரடங்கை மீறி 2 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருந்துகடைகள், பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. வாகன போக்குவரத்து இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்த நிலையில், காஞ்சிபுரம் நெல்லுக்கார சாலையில் முழு ஊரடங்கை மீறி 2 ஓட்டல்கள் செயல்படுவதாக காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த 2 ஓட்டல்களுக்கும் போலீசார் உதவியுடன் சீல் வைத்தனர்.
    படப்பை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் அஜய் பிரசாத் (வயது 22). சாலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 29-ந்தேதி வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    படப்பையை அடுத்த சாலமங்கலம் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அஜய் பிரசாத் கொலை வழக்கு தொடர்பாக செய்யார் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற அப்பத்தா (23), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), அதே பகுதியை சேர்ந்த சந்த்ரு என்ற பல்லு சந்த்ரு(20), படப்பை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அதில் விக்னேஷ் படப்பை பகுதியில் தங்கியிருந்து கியாஸ் கம்பெனியில் வேலை செய்து வந்ததும், இவருக்கும் அஜய் பிரசாத்தாக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த முன்விரோதம் காரணமாக அஜய் பிரசாத்தை வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
    பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானதில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 95.63 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்கல்வித்துறை சார்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிகள் நேற்று வெளியாகி உள்ளது. அதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வை 44 ஆயிரத்து 818 மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்களில் 42 ஆயிரத்து 859 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.63 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவிகள் 97.18 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.82 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மாணவர்களைவிட 3.36 சதவீதம் கூடுதலாகும்.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.13 சதவீதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×