search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சீபுரம் மாவட்டம்"

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 குவாரிகளை திறந்தால் மணல் விலை குறையும் என சங்க தலைவர் யுவராஜ் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராஜகோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் சிங்கபெருமாள் கோவிலில் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது. ராஜ கோபாலின் உருவ படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சங்க நிர்வாகிகள் சந்தித்து மணல் லாரி உரிமையாளர்கள் தீர்மானத்தின் மனுவை அளித்தோம்.

    அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகள் மீது காஞ்சீபுரம் மாவட்ட வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் மூலம் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகளால் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விபத்துக்கள் முலம் அதிக உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

    தமிழக அரசு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த மணல் குவாரிகளை அரசு திறந்தால் மணல் விலை அதிக அளவில் குறையும்.

    6 சக்கரங்களை கொண்ட லாரிகள் 13 டன் மணல் ஏற்ற வேண்டும். ஆனால் இந்த லாரிகளில் 20 டன் மணல் வரை கொண்டு செல்லப்படுகிறது.

    10 சக்கரங்களை கொண்ட லரிகள் 18 டன் மணல் கொண்டு செல்ல வேண்டும். 30 டன் மணல்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அனுமதி அளித்த எடையுள்ள மணலை மட்டும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கனிம பொருட்களை திருட்டு தனமாக கொண்டு செல்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காதர்மை தீன், அகத்தியன், கணேஷ், சையது உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 17 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடித்தது தொடர்பாக அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.

    மேலும் குற்றவியல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக கூடுதலாக ரூ.78 ஆயிரம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

    மின் திருட்டு சம்பந்தமான புகார்களை 9445857591 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சி.ஹரிபிரபாகரன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஊடகத்தினரை பற்றி தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆஸ்பத்திரிக்குள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கட்டுகளுக்காக குரைக்கும் தெரு நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக நுழைவு வாயிலிலேயே நிறுத்திவைக்கப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×