search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக எடை கொண்ட லாரி கவிழ்ந்து விபத்து
    X
    அதிக எடை கொண்ட லாரி கவிழ்ந்து விபத்து

    அதிக எடை கொண்ட லாரி கவிழ்ந்து விபத்து - அதிநவீன கிரேன் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது

    வண்டலூர் அருகே பத்து சக்கரங்கள் கொண்ட அதிக எடை கொண்ட லாரி சாலையில் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.
    வண்டலூர்:

    வண்டலூர் அருகே பத்து சக்கரங்கள் கொண்ட அதிக எடை கொண்ட லாரி, சாலையில் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    தாம்பரம்- வண்டலூர்- மண்ணிவாக்கம் ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும், மண்ணிவாக்கம் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில், ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அதிநவீன கிரேன் கொண்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
    Next Story
    ×