என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேரை கைது செய்த போலீசார், தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட தொடங்கினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் கத்தி, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் பால்நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அகஸ்டின் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (23), திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். தப்பிச்சென்ற திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரிய வந்தது.
இதையொட்டி ஓரிக்கை மகாலட்சுமி நகரை சேர்ந்த குமார் (வயது 55), கவுதம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் வசிப்பவர் அரிகிருஷ்ணன் (வயது 31). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அரிகிருஷ்ணனை கைது செய்தனர்.

படப்பை அருகே 2 கோவில்களில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் முத்துமாரியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டிருந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஊரடங்குக்கு முன்பாக வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை போலீசார் மீட்டு தற்போது நாகலாந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மற்றும் சிறுமி காதலித்து வந்தனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பாக, அதாவது கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி இரு வீட்டாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் மாயமானது குறித்து இரு வீட்டாரும் நாகலாந்து போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்களது செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நாகலாந்து போலீசார் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அவர்களை மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களுக்கு குழந்தைகள் நல குழு மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நேற்று அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலையில் நாகலாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அப்போது செங்கல்பட்டு குழந்தைகள் நல குழு அலுவலர் மதியழகன், குழும தலைவர் ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே சென்னை- பொன்னேரிக்கரை- காஞ்சிபுரம் சாலையில் ரூ.50 கோடியே 78 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலப்பணிக்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 66 தூண்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள. இந்த நிலையில் நேற்று ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ரெயில்வே மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பாலப்பணி முடிவடையும் சூழலில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். இந்த பாலத்தினால் வெகுநேரம் ரெயில்வே பாலத்தை கடக்க காத்திருக்கும் நேரம் குறையும். இதனால் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சிபுரம் தாசில்தார் பவானி, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் ஊராட்சியில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் தங்கி சுற்றியுள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கீவளூர் ஊராட்சியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் சந்தேகம் படும்படி நின்று இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 27), ராஜேஷ் (27), லோகேஷ் (26), விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் அப்பகுதியில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளையடித்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு கடந்த 8-ந்தேதி காசாளர் பொன்ராஜ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது மர்மநபர்கள் திடீரென உள்ளே புகுந்து கத்தி முனையில் அலுவலகத்தில் இருந்த ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கல்குவாரி மேலாளர் விமல் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.
விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கோவர்த்தனன் (வயது 21), மகாராஜா (23), அப்துல் காதர் (22), ஆகாஷ் (21), வெங்கடேசன் (22), ஈஸ்வரன் (24), அருண்குமார் (22), சந்தோஷ் (24), ஜான் (21), சரத்கணேஷ் (22), ஜான் விக்டர் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.6½ லட்சத்தை கைப்பற்றினர்.

குன்றத்தூரில் மனைவி தோசை சுட்டு தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 66). மது குடிக்கும் பழக்கம் உடையவர். தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். மேலும் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி வத்சலா வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் ரவிச்சந்திரன் தனது உடலில் தீ வைத்து கொண்டு அலறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது மனைவி மது குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்,
மேலும் சம்பவத்தன்று ரவிச்சந்திரன் சாப்பிடுவதற்கு தோசை சுட்டு தரும்படி கூறி உள்ளார் அதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டவர் வி.சோமசுந்தரம், இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். இவருக்கு தேனரசி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சோமசுந்தரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க தொண்டர்கள் ஏராளமானோர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த வேதாச்சலம் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து வந்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று காஞ்சிபுரம் வருகை தந்தார். இதற்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது ஏராளமான அ.தி.மு.க.வினர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சோமசுந்தரத்திற்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. அவர் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கார் டிரைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் சிறுமியுடன் வந்த தம்பதியினர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
ஆலந்தூர்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 6 மாதங்களாக இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்திய தூதரகம் மூலமாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 160 மருத்துவ மாணவர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டனர். இந்த விமானத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று பெற்றோருடன் வர அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்த அனைவரும் குடியுரிமை, சுங்கச்சோதனைகள் முடிந்து சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சிறுமியுடன் வந்த தம்பதியினர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது
* தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு
* அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை
* 100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது
* நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு
* மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்
* எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறி வருகின்றன
* மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்
* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
* மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம்
* வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்
* மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன
* காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.