என் மலர்
நீங்கள் தேடியது "ganja sales arrest"
போரூர்:
அசோக் நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த உசேன் என்கிற ஜாகிர் உசேன் என்பவரை கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகளான தீன் முகமது மற்றும் அவரது மனைவி சுந்தரி இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்கள் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மாதவரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அசார் என்ற அசாருதீன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். கேரளாவை சேர்ந்த இவரது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையிலுள்ள அரசு பாலிடெக்னிக் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றத்தை சேர்ந்த அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.






