என் மலர்
காஞ்சிபுரம்
புதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
திருவொற்றியூர்:
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ், தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி சுஷ்மிதா (வயது 23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
சுஷ்மிதா தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுபற்றி வீட்டில் இருப்பவர்களிடம் அவர் தெரிவித்தார். அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும் வரை வலியை பொறுத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினர்.
ஆனால் பிரசவ வலிக்கு பயந்த சுஷ்மிதா, நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்ற அவர், திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுஷ்மிதா உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடி அருகே திருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை, வித்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 23). எலக்ட்ரீசியன். இவருக்கும் ஆவடியை சேர்ந்த நர்மதா (21) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் திருமணமான நாள் முதல் நர்மதாவுக்கும் அவரது கணவர் மற்றும் மாமியார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் நர்மதா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு வாரத்துக்கு முன்பு மாமியார் வீட்டுக்கு சென்ற சுரேஷ்குமார், மனைவி நர்மதாவை தன்னுடன் வரும்படி அழைத்தார்.
மீண்டும் நர்மதாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் கோபித்து கொண்டு நேற்று முன்தினம் நர்மதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த சுரேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருநின்றவூர் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான இரண்டே மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த முயற்சிக்கும்போது எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது ஏன்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
மாமல்லபுரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால், சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும், தொல்.திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுவிட்டேன்.... போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்கின்றனர். பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றியே பேசுவார். அவரின் பாதையில் செல்வோம். அங்குள்ள சிலரின் அட்டூழியங்களுக்கு நாங்கள் தலைவணங்கப்போவதில்லை... பாரத மாதவுக்கு ஜே..
கோழைகள் விடுதலை சிறுத்தைகள். மகிழ்ச்சியில் இருக்காதீர்கள். இது உங்கள் தோல்விதான். எங்கள் சக்தி எவ்வளவு என்று அவர்களுக்கு தெரியும் அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளோம். பாஜக ஒரு போதும் தலைவணங்கப்போவதில்லை. இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதையையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நரேந்திரமோடி மேற்கொள்வார்.
கோழைகள் விடுதலை சிறுத்தைகள். பெண்களுக்கு மரியாதை அளித்தல் உங்களுக்கு கூட்டணியா?
உங்கள் பயணம் பலத்தால் தடுத்து நிறுத்தப்படும்போது நீங்கள் சரியாக பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மற்ற கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்போது ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது நாங்கள் தடுக்கப்படுவது ஏன்? என அதிமுக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் கேள்வி எழுப்புகிறேன். இந்த பாரபட்சம் ஏன்? அல்லது விடுதலை சிறுத்தை கட்சி கலவரத்தை
ஏற்படுத்த திறனுடையவர்கள் என அதிமுக அரசுக்கு தெரிந்திருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.
மணப்பாக்கம் அருகே என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர்(வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், நந்தம்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கு இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து சிதம்பரத்தில் பா.ஜனதா நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை போலீசார் முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.
மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் குஷ்புவை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

காஞ்சீபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மகன் குத்திக்கொலை செய்யப்பட்டார் இதையொட்டி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திருகாவேரிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் எலிசா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ளார். எலிசா தனது நண்பரின் சகோதரியின் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக பழைய சிறு காவேரிபாக்கத்திற்கு சென்றார். அங்கு பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு எலிசா மறுபடியும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு வந்தார். சிறுகாவேரிப்பாக்கம் வந்தபோது அங்கு மறைந்து இருந்த 4 பேர் அவரை வழிமறித்து இரும்பு குழாயால் அடித்தனர். இதில் எலிசா மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் எலிசா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறுகாவேரிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமோதரன் என்கிற தாமு (20), இவரது நண்பர்கள் ஹரிகரன் என்கிற காமு (20), கிருஷ்ணகுமார் (20), குலசேகரன் என்கிற கிஷோர் (22) ஆகியோரை பிடித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் தாமோதரனின் குடும்பத்தினருக்கும் உயிரிழந்த எலிசாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்தது.
போலீசார் 4 பேரையும் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு குழாய், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் காரில் திரிவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் கிராமத்தில் 2 கார்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தன. போலீசாரை கண்டதும் அதில் இருந்த மர்மநபர்கள் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமம் தெரு வீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வா என்ற குள்ள விஸ்வா (வயது 30), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (24), பாலசந்தர் (22), மகேஷ் (22), தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை அடுத்த அலங்காதிட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (35) என்பது தெரியவந்தது.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பட்டா கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதும், கூட்டு சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 14 பட்டா கத்திகள், 6 நாட்டு வெடிகுண்டுகள், 2 கார், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சதி திட்டத்தின் போது உடன் இருந்த ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கருமாங்கழனி பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி வக்கீல் மகாலட்சுமி (30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற ரவுடி விஸ்வா சுவர் ஏறி குதிக்கும் போது கால் எலும்பு முறிந்தது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவரது மனைவி இந்திராணி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் கிராமத்திற்கு சென்றனர். திருமணம் முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம், 2 பட்டு சேலைகள் திருடப்பட்டது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி அம்மாள் என்பவருடைய வீடு, சுப்பிரமணி என்பவருடைய வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் வீட்டில் எந்தவிதமான பொருட்களும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது.
இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை அன்பு தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்பு சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் சென்னை விமான நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக நாடே முடங்கி கிடந்தாலும் போதை பொருட்கள் கடத்தும் கும்பலின் பணிகள் வழக்கம்போல் எந்த வித தங்கு தடையும் இல்லாமல் நடந்தன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து விட்டன.
பன்னாட்டு பயணிகள் விமான சேவை இல்லாத இந்த காலகட்டத்திலும், சரக்கு விமானங்களில் போதை பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து புதிய வகையிலான போதை பொருட்களை சென்னைக்கு கடத்தி வருகின்றனர். போதை பொருட்கள் அடங்கிய பல பாா்சல்களில் “மருத்துவ பொருட்கள் அவசரம்” என்று குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு காலமான கடந்த 7 மாதங்களில் போதை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக நடந்துள்ளன. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த போதை ஸ்டாம்புகள், முதல் முறையாக நெதா்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து உள்ளது.
வெளிநாடுகளில் பிரபலமான போதை மாத்திரைகள் பெருமளவு ஜொ்மன், நெதா்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து தாராளமாக கூரியர் பாா்சல்களில் சென்னை வந்தன.
அதேபோல் உயா்ரக கஞ்சா பவுடா் மற்றும் மாத்திரைகள் எத்தியோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வந்தன. சென்னையில் இருந்து மெத்தோகுயிலோன், ஒப்பியம், பெத்திடோபெடிரின், சூடாபெட்ரீன் என்ற வகையிலான போதை பவுடா்கள், போதை மாத்திரைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் சுங்கத்துறை இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடியாக போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனா். அதில் 14 வழக்குகள் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டவை. 8 வழக்குகள் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்த முயன்றவை.
இந்த 22 வழக்குகளில் ஒரு பெண் உள்பட 26 பேரை கைது செய்துள்ளனா்.
மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஏ.பி. சத்திரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பிரபாகரன் (வயது 27). லாரி உரிமையாளர். கடந்த சில மாதங்களாக தொழில் சரியாக நடைபெறாததால் கடன் அதிகமானதாக கூறப்படுகிறது.
கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர் நேற்றுமுன்தினம் அரளி விதையை அரைத்து குடித்தார்.
வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
வாலாஜாபாத் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 39) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கார்த்திக் குமார் தனது மனைவியுடன் உடல் நலம் சரியில்லாத உறவினரை பார்க்க சென்னைக்கு சென்றார்.
ஆஸ்பத்தியில் இருந்த உறவினரை பார்த்துவிட்டு சென்னையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து கார்த்திக் குமார் வாலாஜாபாத் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு வந்து பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் வீட்டில் நுழைவது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.