search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள் பறிமுதல்"

    • ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய வருவதும் அதனை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் இருந்து நேற்றிரவு சேலம் மாவட்டத்திற்கு லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றிரவு ஓமலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை மதிப்பீடு செய்யும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து லாரியுடன் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணை முடிவில் டிரைவரை போலீசில் ஒப்படைக்கவும், வாகனம் மற்றும் குட்காவை கோர்ட்டில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • கடையில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா விக்னேசை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீ சார் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விறபனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்ய ப்பட்டது தெரிய வந்தது.

    இதை யடுத்து அந்த கடை உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோபி செட்டிபா ளையம் மொடச்சூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா பொருட்கள் வாங்கி விற்பனை செய்வதாக தெரிவி த்தார்.

    இதையடுத்து போலீசார் கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தி னர்.

    இதில் அவர் கோபி அடுத்த களரா மணி பகுதியை சேர்ந்த ராஜா விக்னேஷ் (33) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீ சார் களராமணி பகுதியில் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் மூட்டை மூட்டை யாக தடை செய்ய ப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். இதில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 1250 சிறிய பண்டல்கள் கொண்ட 127 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா விக்னேசை கைது செய்த னர். இதை தொடர்ந்து அவர் கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்க ப்பட்டார். இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான குடோன் பாட்டேல் தெருவில் உள்ளது. இந்த குடோனில் ஓசூரில் இருந்து போதை பொருட்கள் (குட்கா) கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்று அதிகாலை சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள வேல்முருகனுக்கு சொந்தமான குடோனுக்கு பெருந்துறை உதவி கண்காணிப்பாளர் கவுதம் கோயல் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது குடோனில் வெங்காய லோடு, அரிசி மூட்டை இடையில் சுமார் ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடையுள்ள குட்கா மற்றும் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.

    மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் போதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஓசூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு சத்திரக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து ராமநாதபுரம் சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

    அப்போது காரில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களான கஞ்சா ஆயில் 50 கிலோ மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் 38 கிலோ கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.160 கோடி ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லியோ பாக்கியராஜ் (வயது39), தனசேகரன் (32) என தெரியவந்தது. இவர்கள் ராமநாதபுரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி க்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்
    • நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை பிரிக்கப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள் நன்னடத்தை பிணை சான்று மற்றும் வழக்குகளின் தலைமறைவு எதிரிகள் இன்று மாவட்ட அளவில் சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி க்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது. நன்னடத்தை பிணை சான்று பெற 40 பேருக்கு அழைப்பு விடுத்து இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 வழக்குகள் பதியப்பட்டு 10 பேர் கைது. சாராய வழக்குகளில் 206 லிட்டர் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

    • அவரப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்குள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • மளிகைக் கடை நடத்தி வரும் திருச்செந்தூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை கைது செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்குள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மளிகைக் கடை நடத்தி வரும் திருச்செந்தூரை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 35) என்பவரை கைது செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஈஸ்வரனை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×