பல்லடத்தில் மளிகை கடையில் பதுக்கிய 85 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

அவரப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்குள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.மளிகைக் கடை நடத்தி வரும் திருச்செந்தூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை கைது செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான ஈஸ்வரனையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் படத்தில் காணலாம்.
கைதான ஈஸ்வரனையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்குள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மளிகைக் கடை நடத்தி வரும் திருச்செந்தூரை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 35) என்பவரை கைது செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஈஸ்வரனை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com