என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதோடு டி.ஆர்.ஐ. மற்றும் சுங்கத்துறையினா இணைந்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சோதனை செய்தனர், மும்பையை சேர்ந்த 35 வயது ஆண் பயணிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாக தகவல் அளித்தார்.
அவர் ஆப்பிரிக்கா நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்தது தெரியவந்தது.
அந்த பயணியை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவர்களை எடுத்து பிரித்து பார்த்தனர்.
அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.88 லட்சம் ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே உள்ள மாருதி நகரில் வசித்து வருபவர் மேகநாதன். இவர் உள்ளாட்சி நிதித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 23-ந்தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கொள்ளையில் ஈடுபட்டது காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் பகுதியை சேர்ந்த உறவினரான சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள், சாலவாக்கத்தை சேர்ந்த கவுதம், சிவக்குமார் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பவுன் நகை, 31 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி உள்ள வெள்ளாளர் தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கள் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அந்த பகுதியில் ஒரு வீட்டின் பின்புறத்தில் சென்றனர் அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 4 பேர் அதிகாரிகள் வருவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர்
அங்கு சோதனை செய்த போது பிறகு 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைப்பட்டு இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி பதுக்கல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் பாவாஜி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வீட்டில் கியாஸ் சிலிண்டர்கள் ஆபத்தான முறையில் வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் கியாசுடன் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 60 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தமாக கியாஸ் சிலிண்டர்கள் இங்கு எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தமிழகத்திலும் கால் பதித்து விட்டது. நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நைஜீரியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள்.

அந்த முதியவர் நைஜீரியா நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால் முதியவர் நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதன் பின்னர் அவர் கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பின்னரே முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து முதியவருடன் தொடர்பில் இருந்த விடுதி ஊழியர்கள், உறவினர்கள் உள்பட 91 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.
பரிசோதனை செய்யப்பட்டுள்ள நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஆலந்தூர் மண்டல சுகாதார அலுவலர் சுதா கூறியதாவது:-
கடந்த 10-ந்தேதி நைஜீரியாவில் இருந்து வந்து நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 61 வயது முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்கள் 50 சதவீதத்துக்கும் மேல் முககவசம் அணிவது இல்லை. முதல் தவணை தடுப்பூசி 98 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். டெங்கு வராமல் இருக்க கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்






