என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சீபுரம் அங்கன்வாடி மையம் அருகே மூடப்படாத கால்வாயால் ஆபத்து
காஞ்சீபுரம் அங்கன்வாடி மையம் அருகே மூடப்படாத கால்வாயால் ஆபத்து
காஞ்சீபுரம் அங்கன்வாடி மையம் அருகே மூடப்படாத கால்வாயால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பாவா தெருவில் மூன்று சாலைகள் இணையும் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு மிக அருகில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் பணி நடைபெற்றபோது ஜே.சி.பிஎந்திரம். கால்வாய் மீது ஏறி இறங்கியதில் கால்வாய் மீது இருந்த சிலாப் உடைந்தது.
இதன்பின்னர் அது சரிசெய்யப்படவில்லை. மூடப்படாத இந்தக் கால்வாயால் அசம்பாவிதம் ஏற்படும் அதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story






