என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள்
காஞ்சிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்த 60 சிலிண்டர்கள் பறிமுதல்
காஞ்சிபுரத்தில் வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பாவாஜி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வீட்டில் கியாஸ் சிலிண்டர்கள் ஆபத்தான முறையில் வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் கியாசுடன் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 60 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தமாக கியாஸ் சிலிண்டர்கள் இங்கு எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story