என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து பலி
உத்திரமேரூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை 11 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் கிராமத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் மூலம் அங்கு துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்த அம்புரோஸ் (வயது 48) என்பவர் வேலை செய்துகொண்டிருந்தார்.
திடீரென டிராக்டர் 10 அடி உயரத்தில் இருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் இருந்த அம்புரோஸ், நந்தகோபால் இருவரும் டிராக்டரின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் அம்புரோசை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நந்தகோபால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






