என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது.
    • அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் அருகே டீக் கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள், பஸ் நிலையம், பத்ரகாளி அம்மன் கோவில், உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (45) வங்கியில் வைத்திருந்த நகையை மீட்டு கீழ்பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தன் பாக்கெட்டில் வைத்திருந்த 1 பவுன் தங்க செயினை தவற விட்டு விட்டார். நகை இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசாரிடம் கூறினார்.

    இந்த நிலையில் பர்கூர் 108 ஆம்புலன்சு டிரைவரான அந்தியூர் அருகே உள்ள பிரம்ம தேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் (30) டீக்குடிக்க தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது. இதை தொடர்ந்து அவர் அந்த நகையை எடுத்து பார்த்தார். இது தங்கச்செயின் என்பதை உறுதி செய்தார்.

    உடனடியாக அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் என்ற போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.

    இதையடு த்து போலீசார் ஒலகடத்தை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியிடம் செல்போனில் பேசி உடனடியாக வரவழை த்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் தங்க செயினை ஒப்படை த்தனர்.

    மேலும் நகையை பெற்று கொண்ட ஈஸ்வரமூர்த்தி 108 டிரைவர் மகேந்திரன், போலீசார் மற்றும் அலுவலர்க ளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

    தவறவிட்ட நகை ஒரே நாளில் கிடைத்ததை யடுத்து அவர் மகிழ்ச்சியுடன் சென்றார்.

    மேலும் ரோட்டில் கிடந்த நகையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரனுக்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நண்பர்கள் தன்னார்வலர்கள் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தனர்.

    • டிப்பர் லாரியும், டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூர் ெரயில்வே மேம்பா லத்தில் நேற்று மதியம் 3.30 மணிக்கு வடக்கில் இருந்து தெற்காக வந்த டிப்பர் லாரியும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி மக்கா சோளம் ஏற்றி வந்த டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் 2 லாரிகளின் ஓட்டுநர்களுக்கும் காயம் பட்டு இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரின் உயிருக்கும் ஆபத்து இல்லை. சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் சென்னி மலை-பெருந்துறை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்ட விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.23 அடி யாக உள்ளது.
    • பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொ டர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.23 அடி யாக உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 619 கன அடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக பவானிசாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • இரவு, பகலாக பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணையின் உயரம் 40 அடி ஆகும். சமீபத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை உயர்ந்தது.

    இந்த தண்ணீரை அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 5 அடியாக நீர்மட்டம் இருந்தது. அப்போது அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று (வெள்ளிக்கிழமை) அணைக்கு 525 கன அடியாக நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 15.26 அடியாக இருந்தது.

    நேற்று அணைக்கு வந்த தண்ணீரில் 566 என்ற அளவில் மிக குறைவாக டி.டி.எஸ் (உப்புத்தன்மை) இருந்ததாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இரவு, பகலாக பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.

    • குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காளான் முளைத்துள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தத்தப்பள்ளி அருகே கலைஞர் நகரில் வசித்து வருபவர் குணசேகரன் (38). இவரது மனைவி பிருந்தா (35). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து கொண்டு குணசேகரன், பிருந்தா வீட்டுக்கு கிளம்பி வந்தனர். அப்போது பிருந்தா தோட்டத்தில் விளைந்திருந்த மொட்டு காளானை பறித்து வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    பின்னர் சமைத்து கணவன்-மனைவி சாப்பிட்டனர். அதன்பிறகு குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளனர். காளானை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சாப்பிட்டது விஷம் தன்மை கொண்ட காளான் என தெரிய வந்தது. கணவன், மனைவி ஓரளவு தேறி வந்த நிலையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுகிறது.

    தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காளான் முளைத்துள்ளது. இதனை ஒரு சிலர் சமைப்பதற்கு எடுத்து சென்று சாப்பிட்டு விடுகின்றனர். அவ்வாறு செய்தால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதரில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது.
    • சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சின்ன ரங்கன் என்கிற சென்டான் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சென்டான் எப்போதும் அதே பகுதியில் தர்மன் என்பவர் தோட்டத்தில் பால் கறக்க செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை 4.50 மணிக்கு இந்திரா நகரில் உள்ள தர்மன் என்பவரின் தோட்டத்திற்கு பால் கறக்க சைக்கிளில் சென்டான் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது. இதில் பலத்த அடிப்பட்டு உயிருக்காக சென்டான் போராடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அவரது மகள் வந்து பார்த்தார்.

    அப்பொழுது தந்தை நிலையை கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் கார் மூலம் சென்டானை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சென்டான் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார்.
    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள புங்கம்பள்ளி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (32). விவசாயி.

    இவர் தனது தாத்தா ரங்கப்பகவுண்டருடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக கலைவாணன் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்தததையடுத்து, உயர் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அப்போது முருகேசனை பாம்பு கடித்தது.
    • செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த கள்ளியம்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). இவர் அங்குள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. ஆனால் அவர் தன்னை பாம்பு கடித்து என்று தெரியாமல் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார். மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள். இது குறித்து அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவருடைய உறவினர்கள் முருகேசனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.
    • மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் இன்று முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதலே வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதல் தீபாவளியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் பிற மாவட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ெரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பட்டாசு கொண்டு செல்லப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் ரெயில்வே போலீசார் பயணிகள் உடை மைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா என்று உடைமைகளை சோதனை செய்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும்.

    இதனை தடுக்கும் வகையில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேக ப்படும் சில நபர்களை பிடி த்து விசாரணை நடத்திய அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயணி களின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.

    இதேபோல் ஈரோட்டுக்கு வரும் ஒவ்வொரு ரெயில்க ளில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். மேலும் பயணி களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினர்.

    ெரயில் பயணத்தின் போது யாரும் சாப்பிட எது கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிடக்கூடாது. அதிக நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    இரவு நேரத்தில் தூங்கும் போது ஜன்னலை மூடி விட்டு தூங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய நோட்டீசையும் வழங்கினர்.

    இன்று வழக்க த்தை விட ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்ட தால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    • அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சோளங்காபாளையம் டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு வதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த புதுக்கோ ட்டை மாவட்டம் வேள ச்சேரி பட்டி யைச் சேர்ந்த ராமன் மகன் மாரிமுத்து (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சர்வீஸ் சென்டரில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
    • பேட்டரிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பம் பாளை யம் பிரிவில் ரமேஷ் என்ப வர் இருசக்கர எலக்ட்ரிக் வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல அனைவரும் ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவி ட்டனர்.

    சிறிது நேரத்தில் ஷோரூம் அருகில் உள்ள சர்வீஸ் சென்டரில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

    அதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். ஷோரூம் உரிமை யாளர் ரமேஷுக்கும் தகவலறிந்து அங்கு வந்தார்.

    சம்ப வ இடத்துக்கு வந்த தீயணை ப்பு துறையினர் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். உரிமையாளர் ரமேஷ் மற்றும் தீயணைப்புத் துறை யினர் அங்கிருந்த பேட்டரி களை மேலும் தீ பரவாமல் இருக்க அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

    இருப்பினும் இந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

    அதிக நேரம் சார்ஜ் போடப்பட்டதால் பேட்டரிகளில் தீப்பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார்.
    • ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன் (44). இவரது மனைவி சாந்தி (33). உறவினர்களான இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சாந்தி ஈரோட்டில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சரவணன் சரி வர வேலை க்கு செல்லாமல், வீட்டை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் சமீப காலமாக சாந்தி மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாந்தியின் மகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது பேன் மாட்டும் கொக்கியில் தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×