என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில த்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வ தற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்ப டுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணி பாரம் ஏற்றிக்கொண்டு பர்கூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

    இதில் 6 பேர் பயணம் செய்தார்கள். தொடர்ந்து வரட்ட பள்ளம் அணை வளைவு பகுதியில் சரக்கு வாகனம் வந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்ட னூர், மாரியப்பன் (47) பழனியம்மாள் (44) ராமாயி (45) செவன் (48) மாரிமுத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கேரளா மாநிலம் திரு ச்சூர் மாவட்டம் கொடுங்க ல்லூர் ரியாஸ் (34) ஓட்டுன ருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் சென்னம்பட்டி பூனர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கின்ற குமார் (45) கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகம் என்கின்ற குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
    • மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.

    ஈரோடு, நவ. 21-

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த கேரமாளம் சோதனைச் சாவடி அருகே இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் காரில் இருந்த வர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் சரவணன் (வயது 32),

    அதே மாநிலம் அட்டப்பாடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வேலுச்சாமி (43) என்பதும், இவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 300 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆசனூர் போலீ சார் சரவணன், வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினேன்.
    • இந்திய கூட்டணியால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளையில் இன்று காலை தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 2,500 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஈரோடுக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டேன். தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினேன்.

    இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை 65,000 வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் (மக்கள்) வெற்றி பெற செய்தீர்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திற்கு சென்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு வரும்போது பெரியார் பாசறைக்கு செல்வது போன்று உணர்வு ஏற்படுகிறது. கழகத்தை நான்கு மண்டலமாக பிரித்துள்ளோம்.

    திருவள்ளுவர், அண்ணா, பெரியார், கலைஞர் எனப் பிரித்துள்ளோம். மதுரையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடந்தது. அது என்ன மாநாடு தெரியுமா. புளி சோறு மாநாடு. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு இருந்தது. ஆனால் ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்ற எடுத்துக்காட்டாக சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு அமையும். திமுக எவ்வளவோ தேர்தல் அறிக்கைகளை கூறி நிறைவேற்றி உள்ளது.

    அதில் முக்கியமான நான்கு மட்டும் உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். 1) மகளிர் இலவச பேருந்து பயணம். 2) அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி சொல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். 3) காலை உணவு திட்டம் 4) மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞரின் உரிமை தொகை திட்டம்.

    இதில் இரண்டு, மூன்று திட்டமானது தேர்தல் அறிக்கையில் கூறாத திட்டம். கலைஞர் தமிழகத்தில் 5 முறை ஆண்டதும், அதே நேரத்தில் தற்போது தலைவர் மு. க. ஸ்டாலின் ஆண்டு வருவதற்கும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் தான் காரணம். நான் தந்தை பெரியார், அண்ணா ஆகிய இருவரையும் நேரில் பார்த்ததில்லை. அவர்களின் மறு உருவமாக உங்களை (மூத்த உறுப்பினர்கள்) பார்க்கிறேன். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எப்படி அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினார்களோ அதைப்போல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்திய கூட்டணியால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென அரசு பள்ளிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது:-

    நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

    • யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.

    • பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவுரப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது.

    அதன்படி ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் , தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,500 மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கவுரவிக்கிறார். இதே போல கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார்.

    • கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.
    • குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சதுமுகை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சதுமுகை ஊராட்சி அலுவலகத்தில் சென்று புகார் அளித்தனர்.

    ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், குழந்தைகளை வைத்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆலத்து கோம்பை பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சதுமுகை ஊராட்சி மன்ற தலைவி சத்யாவின் கணவர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சிவராஜை சூழ்ந்து கொண்டு அப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் இன்று மாலைக்குள் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானிசாகர், அம்மாபேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குறிச்சி டாஸ்மாக் கடை, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் கிட்டுசாமி (வயது 55),

    சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலம் மகன் சிவக்குமார் (வயது 42). இவர் தறி ஓட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி கலாமணி (36). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. இவ ர்களுக்கு குழந்தை இல்லை.

    சிவகுமார் நீண்ட நாட்க ளாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததால் மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததாலும், தனக்கு குழந்தை இல்லாததாலும் மனவேதனையில் இருந்த சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.

    இதையடுத்து உறவின ர்கள் அவரை மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நி லையில் அங்கு சிகிச்சை பெ ற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி கலாமணி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.61 ஆயிரத்து 212-க்கு விற்பனையானது.

    அவல்பூந்துறை:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 5 ஆயிரத்து 83 எண்ணிக்கையிலான 2 ஆயிரத்து 192 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.24.13 காசுகள்,

    அதிகபட்ச விலையாக ரூ.30.50 காசுகள், சராசரி விலையாக ரூ.29.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.61 ஆயிரத்து 212-க்கு விற்பனையானது.

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.57 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,138 மூட்டைகளில் 1,94,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தர கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.72. 05-க்கும், அதிகபட்சமாக ரூ.88.20-க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.15.21-க்கும், அதிகபட்சமாக ரூ. 84.50-க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.1.57 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.68 அடியாக உள்ளது.
    • மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது. நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.68 அடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 864 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,200 கனஅடியாக நீர் அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.57 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.49 அடியாகவும் உள்ளது.

    ×