மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.
மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
Published on

ஈரோடு, நவ. 21-

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த கேரமாளம் சோதனைச் சாவடி அருகே இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

அதில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் காரில் இருந்த வர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் சரவணன் (வயது 32),

அதே மாநிலம் அட்டப்பாடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வேலுச்சாமி (43) என்பதும், இவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 300 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆசனூர் போலீ சார் சரவணன், வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com