மது விற்ற 2 பேர் கைது

அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானிசாகர், அம்மாபேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குறிச்சி டாஸ்மாக் கடை, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் கிட்டுசாமி (வயது 55),

சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com