என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் பிளஸ்-2 படிக்கும் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவியுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் அவர் வசித்த பகுதியில் யாருக்காவது காய்ச்சல், சளி இருக்கிறதா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
    தொற்று உறுதியான மாணவி படித்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவிகள் என 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அந்த மாணவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அந்த மாணவிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே மாணவி படித்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் மாணவிகள் என 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

    பரிசோதனை செய்து கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 11 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பங்களாப்புதூரில் கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பங்களாப்புதூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55) விவசாயி.

    இவர் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் போதிய அளவு வருமானம் விவசாயத்தில் கிடைக்கவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தட்சிணாமூர்த்தி வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

    இந்தநிலையில் தட்சிணாமூர்த்தி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டு, வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனே கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன்தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட தட்சிணாமூர்த்திக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
    கோபிசெட்டிபாளையம் அருகே திருப்பூர் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமணி (36). இவர்களுக்கு பிரபாகரன் (22) என்ற மகனும், செல்வி (14) என்ற மகளும் உள்ளனர்.

    தங்கமணி வேலம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் அஸ்வின் (21) என்பவரது கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தனது மகன் வயதுள்ள அஸ்வினுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் தங்கமணியை குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். இதேபோல் அஸ்வினையும் அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி நேற்று வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி என்ற பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஒரு கிணற்று ஓரம் அமர்ந்து வி‌ஷம் குடித்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை 2 பேரின் உடல்களும் கிணற்றில் கிடக்கும் தகவல் தெரிய வந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்புதான் முழு விபரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்று குறைய தொடங்கியதால் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 395 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவனுக்கு முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதேபோல் கோபி கல்வி மாவட்டம் சிறுவலூர் மணியக்காரன் புதூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கவுந்தப்பாடி மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் 41 ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உள்பட 407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டது.

    இதில் மேலும் பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 746 மாணவிகள் படித்து வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த மாணவி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் உள்பட 780 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுபோல் பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பள்ளியில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் படிக்கும் மற்ற மாணவிகள் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
    ஈரோடு :

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன்கள் சுபாஷ், பரத். சத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுபாஷ் 8-ம் வகுப்பும், பரத் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கொடைக்கானலை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அஜய் பிரசன்னா ஒரு நிமிடத்தில் 82 தடவை தோப்புக்கரணம் போட்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஒரு நிமிடத்தில் 88 தோப்புக்கரணம் போட்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார்.

    இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார். இந்த செய்தியை பார்த்த சுபாசும், பரத்தும் உலக சாதனை படைக்க நாமும் முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். இதற்காக நாள்தோறும் காலை கடும் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

    இந்தநிலையில் சுபாஷ் ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்தார். அதுபோல பரத் நாற்காலி மேல் நின்று 93 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

    இதை அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு பதிவு செய்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,269 பேர் பல்வேறு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 224 வரைதான் சென்றது. ஆனால் 2-ம் அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1,784 வரை சென்றது. அதன்பிறகு தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேல் தினசரி பாதிப்பு இருந்து வந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 100 என்ற அளவில் வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 99 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது. இன்று இரவுக்குள் 1 லட்சத்தை கடந்து விடும்.

    இதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 121 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 665 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1,269 பேர் பல்வேறு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி உள்ளதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்று குறைய தொடங்கியதால் முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடந்து வருகின்றன. ஒரு வகுப்பில் 50 சதவீதம் மாணவ-மாணவிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தினமும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 395 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவனுக்கு முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த மாணவன் வகுப்பில் இருந்த மற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பும் இல்லை. இந்நிலையில் கோபி கல்வி மாவட்டம் சிறுவலூர் மணியக்காரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று உறுதியான மாணவி படிக்கும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடன்படிக்கும் மாணவ-மாணவிகள், மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்தது.

    இதையடுத்து பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஊரில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து பள்ளிக்கு படிக்க வரும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா? என்ற விவரங்களையும் ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவுந்தபாடி மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளியில் பணிபுரியும் 41 ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்று இரவு வர உள்ளது. அதுவரை பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து கவுந்தப்பாடி மாதிரி அரசு ஆண்கள் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளி வரும். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் செல்போனில் ‘வீடியோம் கேம்’ விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஸ்ரீராம் (வயது 22) 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அவரது தந்தையுடன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 6 மாதங்களாக ஸ்ரீராம் செல்போனில் அதிகமாக ‘வீடியோ கேம்’ விளையாடிக்கொண்டு இருந்தார். காலப்போக்கில் அதற்கு அடிமையான ஸ்ரீராம் இரவிலும் தூங்காமல் நீண்ட நேரமாக விளையாடினார்.

    அதனால் இரவிலும் தூங்காமல் எதற்காக செல்போனை பார்த்து கொண்டே இருக்கிறாய் என்று அவருடைய தந்தை கண்டித்து உள்ளார். ஆனால் அதற்கும் பதில் கூறாமல் ஸ்ரீராம் தொடர்ந்து செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்தார்கள். அப்போது ஸ்ரீராம் மட்டும் வீட்டில் இருந்தார். அதன்பிறகு கடைக்கு சென்றிருந்த ஸ்ரீராமின் தம்பி லட்சுமணன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு ஸ்ரீராம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீராமை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையானதால் ஸ்ரீராம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்,’ என தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் நேற்று மெகா முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

    இதில் ஈரோடு மாநகராட்சியில் மட்டும் 67 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் இந்த முகாம்களில் தடுப்பூசிகள் போட்டனர்.

    வாக்குச்சாவடி மையங்கள், பொது இடங்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது. அத்துடன், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் வரவழைக்கப்பட்டு ஊசி போடப்பட்டது.

    இந்த முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமேலாண்மை இயக்குனரும், ஈரோடு மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியுமான வி.தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆர்.கே.வி. ரோடு மாநகராட்சி பூங்கா, இடையன்காட்டு வலசு பள்ளிக்கூடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டனர்.

    ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை தென்றல் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் பெயிண்டர். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு புவனேஸ்வரி, ஸ்ரீமதி என்ற 2 மகள்களும், விஜய் (8) என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

    நேற்று மதியம் விக்னேஷ் தனது மனைவி நதியா மற்றும் மகன் விஜய் ஆகியோருடன் கள்ளிப்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றார். விக்னேஷ் மற்றும் நதியா இருவரும் துணிகளை துவைத்துக்கொண்டு இருந்த போது ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த சிறுவன் விஜய் திடீரென தண்ணீரில் மூழ்கினான்.

    இதை கண்ட பெற்றோர் தண்ணீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயற்சித்தனர். தற்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பங்களாபுதூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் இருக்கவே அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவனை தேடும் பணி நடைபெற்றது. சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் விஜய் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    விஜய்யின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும், இறைச்சிகளை வாங்க நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    புரட்டாசி மாதம் வருகிற 17-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வணங்குவர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் அடுத்த வாரம் தொடங்க இருப்பதால் அசைவ பிரியர்கள் நேற்று மீன், இறைச்சி போன்றவற்றை விரும்பி வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட், ஸ்டோனி பாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை முதலே வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. எனினும் மீன் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. மத்தி மீன் ஒரு கிலோ ரூ.200-க்கும், ரோகு ரூ.180-க்கும், வஞ்சரம் ரூ.800-க்கும் விற்பனையானது. இதேபோல் பாறை (ரூபா), சங்கரா போன்ற மீன்களும் கடந்த வாரத்தை விட சற்று விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும், இறைச்சிகளை வாங்க நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
    ×