என் மலர்
ஈரோடு
- ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.
- இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தர்மாபுரம் பகுதியில் தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி மல்லப்பா என்பவரை மதித்துக் கொன்றது. அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப ட்டதை அடுத்து விவசாய கொன்ற ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.
மேலும் அந்த ஆட்கொல்லி யானையை வனப்பகுதியை விட்டு வெளி–யேறாமல் தடுக்க இரியபுரம் வனப்ப–குதியில் இருந்து திகினாரை வரை 3.7 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழியை பராமரித்து ஆழம் மற்றும் அகலப்படுத்த வனத்துறை திட்டமிட்டு தற்போது பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்தி–ர–குமார்மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார். அகழி பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்ப–ட்டுள்ளதா–கவும் தற்போது ஆட்கொல்லி யானை கோடம்பள்ளி வனப்பகுதிக்கு சென்று விட்டதாகவும் மீண்டும் ஊருக்குள் திரும்பி வராத வகையில் கும்கி யானைகள் மூலம் யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
- கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
- மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமம் ஏற்கனவே திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனித்தனியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்கி வருகிறது.
இந்த கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் பட்டாம்பூச்சி பூங்காவை சுற்றிலும் 147 மீட்டர் தொலைவிற்கு கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடப்பட உள்ளது.
மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த 2 பூங்காக்களின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணி கள் விரைவில் முடிக்க ப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.
- எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 47,614 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 21 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 26 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 19,622 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தமிழ்நாடு–பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார–மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான–சிறு தொழில் கடன், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது க்குள் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகாலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் பெண்களுக்கான–புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரைகடனுதவி–வழங்கப்படு கிறது.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க –வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதி க்கப்படுவார்கள்.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி க்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு– ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 அயிரம் வரை கடனுத–வி வழங்கப்படுகிறது.
மாவட்ட பி–ற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவுவங்கி–கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்தவிண்ணப்பங்களைசம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
எனவே ஈரோ–டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்-திட்ட அறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கோரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
மேற்படி திட்டத்தில் பயன்பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக–விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
- பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
- நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி முதல்-அமைச்ச ருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. அணையின் மொத்த கொள்ளளவான 32.8 டிஎம்சியில், தற்போது 19 டி.எம்.சி.க்கும் மேலாக தண்ணீர் உள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த ஆண்டுகளை போல நடப்பாண்டிலும் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்க ப்படுகின்றது. வழக்கமாக அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட்டு 1-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கி றோம்.
நடப்பாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க ப்பட்டது போல பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கும் முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே அரசு அறிவித்தால் நிலத்தை தயார் செய்வதற்கும், இடு பொருட்களை தேடுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- புளியம்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் அவரிடமிருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தர வின் பேரில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடித்து ரேஷன் அரிசி யை பறிமுதல் செய்து வரு கின்றனர்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி அடுத்த ஆனூர் ரோடு, அவிநாசி பிரிவு பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போது காரை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம், நேரு நகரை சேர்ந்த சதீஷ்குமார் (38) என தெரியவந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்க சென்றது தெரி யவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஈரோட்டில் கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது.
- 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர்.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து மதியம் 12.50 மணிக்கு கிளம்பும் ரெயில் நெல்லைக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கமாக காலையில் நெல்லையில் இருந்து கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலையில் ஈரோட்டுக்கு வந்தடையும். இந்த ரெயிலில் தினமும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து வந்தனர்.
கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனால், ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம், ஈரோடு- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது.
அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.35 மணிக்கு ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரெயில் நெல்லைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து காலை 6.15 மணிக்கு கிளம்பும் ரெயில் மதியம் 2.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்தடையும்.
இதேபோல் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை -சேலம் செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த ரெயில் இன்று காலை கோவையில் காலை 9 மணிக்கு கிளம்பி ஈரோடு வழியாக மதியம் ஒரு மணிக்கு சேலம் சென்றடைந்தது. இதேபோல் மதியம் 1.40 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி ஈரோடு வழியாக மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் ஈரோட்டில் இருந்து மேட்டூர் அணை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இன்று அதிகாலை 5 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து கிளம்பிய மேட்டூர் அணை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.30 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று அடைந்தது. இதைப்போல் இரவு 7.25 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து கிளம்பும் ரெயில் இரவு 10.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்து அடையும். இந்த ரெயில் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்கலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் பெருந்துறை வண்ணாம்பாறை பகுதியில் தங்கி பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்து பொருட்களை வாங்கி கொண்டு வீட்டி ற்கு செல்வதற்காக ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஆரோக்கியம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரு ந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வரு கின்றனர்.
- ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பி.எஸ்.என்.எல். பைபர் கேபிளை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு சென்றனர். இதனால் நேற்று முதல் முதல் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மலை கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றன.
- இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தாளவாடி:
தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் செல்போன் சேவை இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வந்தனர்.
பி.எஸ்.என்.எல். பைபர் கேபிள் மூலம் கெத்தேசால், மாவள்ளம், தேவர்நத்தம் குளியாடா போன்ற 30-க்கும் மேட்பட்ட மலை கிராமங்களுக்கு லேண்ட்லைன் செல்போன் சேவை பி.எஸ்.என்.எல். மூலம் வழங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டுவந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பி.எஸ்.என்.எல். பைபர் கேபிளை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு சென்றனர். இதனால் நேற்று முதல் முதல் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மலை கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- சென்னிமலை பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
- உடனே தீயணைப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடிச்சி தீயை அணைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், உப்பிலிபாளையம் ரோட்டில் குன்று பகுதியில் பேரூராட்சி குப்பைகள் கொட்டப்படும் கிடங்கு உள்ளது.
நேற்று காலை குப்பைகள் கொட்டியுள்ள பகுதியிலிருந்து திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளில் இருந்து வெளியேறிய புகையால் திணறினர்.
உடனே பேரூராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குப்பைகளை கிளறி அதில் உள்ள தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அப்போது பேரூராட்சி பணியா–ளர்களும் உடனிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் புகை மண்டலம் சிறிது நேரம் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். குப்பைகளில் பிடித்த தீ முழுவதும் அணைக்க–ப்பட்டதால் புகை மண்டலம் கட்டுக்குள் கொண்டு–வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. குப்பையில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.–––
- திருப்பதிக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற போது திடீர் கட்டுபாட்டை இழந்த கார் சுவற்றில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரரின் தாயார் பலியானார்.
- இதுகுறித்து எம்.ஆர்.பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம் பாளையம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(35). இவர் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (30). இவர்களுக்கு மிதுன் (12), சஞ்சீவ் (6) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு வினோத்குமார் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து திருப்பதி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தனது மனைவி, மகன்கள், தாய் தேவி(55). மைத்துனர் குணசீலன் ஆகியோருடன் காரில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். காரை வினோத்குமார் ஓட்டி சென்றார்.
ஆந்திரா மாநிலம் பூதலப்பட்டு நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மல்லவரம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கி அங்குள்ள சாலையின் தடுப்பு சுவரில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சரண்யா, மூத்த மகன் மிதுன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். வினோத்குமாருக்கு காலிலும் நெஞ்சு பகுதியில் அடிபட்டது. அவரது தாய் தேவிக்கு கை, கால் மட்டும் நெஞ்சு பகுதியில் காயமும், மற்றொரு மகன் சஞ்சீவிக்கு தலையிலும் அடிபட்டது. மைத்துனர் குணசீலனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த எம். ஆர் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காய்மடைந்த அனைவரையும் மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை–க்காக அனுமதித்தனர்.
இதில் உயிரிழந்த சரண்யா, மிதுன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சரண்யா, மிதுன் உடல் நேற்று இரவு திருப்பதியில் இருந்து ஈரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருவரது உடல்களையும் பார்த்து உறவினர்கள் அழுதனர்.
இந்நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத் குமாரின் தாய் தேவி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தேவியின் உடல் இன்று இரவு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






