search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "should be opened"

    • பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
    • நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி முதல்-அமைச்ச ருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. அணையின் மொத்த கொள்ளளவான 32.8 டிஎம்சியில், தற்போது 19 டி.எம்.சி.க்கும் மேலாக தண்ணீர் உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த ஆண்டுகளை போல நடப்பாண்டிலும் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்க ப்படுகின்றது. வழக்கமாக அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட்டு 1-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கி றோம்.

    நடப்பாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க ப்பட்டது போல பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கும் முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே அரசு அறிவித்தால் நிலத்தை தயார் செய்வதற்கும், இடு பொருட்களை தேடுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×