என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையிலிருந்து 25,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 25,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 6-வது நாளாக 102 அடியாக நீடித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் 25 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த உபரி நீர் பவானி கூடுதுறையில் கலப்பதால் பவானியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கத்தால் சத்தியமங்கலம் அடுத்த புது கொத்துக்காடு பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு விவசாயி பெரியசாமி என்பவர் தோட்டத்தில் சாகுபடி செய்த கதளி வாழைத் தோட்டத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 4,200 வாழைகள், 300 தென்னைகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளம் வடியாவிட்டால் இன்னும் ஓரிரு நாட்களில் வாழைகள் அழுகி வீணாகிவிடும் என்றும், தோட்டக்கலை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் தொடர்ந்து பவானிசாகர் அணையிலிருந்து 25,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் இரு கரையும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக இன்று 6-வது நாளாக கொடிவேரி அணையில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்றும் கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து இன்று 1.45 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிகரை, கொடுமுடி போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
- கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
- கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (56). இவர் அங்குள்ள ஒரு தனியா ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி (38). இவர்களுக்கு ஹரிபுவனேஷ்(12) என்ற மகன் உள்ளார். இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் லோகநாதனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லோகநாதன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் வறுமை வாட்டியது.
இதன் காரணமாக லோகநாதன் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் லோகநாதன் திணறி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று லோகநாதன் கோபியில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.
கணவனின் உடலை பார்த்து பத்மாவதியும், அவரது மகனும் கதறி அழுதனர். இதனையடுத்து இன்று காலை பத்மாவதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது மகனுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் பத்மாவதியும் அவரது மகனும் மயங்கி விழுந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரும் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.
ஈரோடு, ஆக. 9-
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா உத்தர வின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் போலீசார் கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது வீட்டினுள் ஒரு பெண் இருந்தார். அவர் அருகே ஒரு பெரிய பை இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 3.50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி (48) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பெண் மற்றும் கஞ்சா பொட்டலங்களை எடுத்துக் கொண்டு சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு, ஆக. 9-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 554 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
- மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பவானி:
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இதையொட்டி பவானி காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் ஆற்றங் கரையோரம் உள்ள பொது மக்கள் பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் வடியாத தால் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடந்து செல்லபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மற்றும் சைக்கிள் ஆகியவை செல்ல அனுமதி இல்லை.
பவானி ஆற்றில் கடந்த வாரம் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆகயத்தாமரை அதிகளவில் அடித்து வந்து தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. அதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.
இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குளித்து வருகிறார்கள்.
- ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
- ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கொடுமுடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து இருந்ததால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த வாரம் வினாடிக்கு 2 லட்சத்து15 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆறு வெள்ள காடாக காட்சியளித்தது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதேபோல் மறுபுறம் பவானி சாகர் அணையும் 102 அடியை எட்டியது. இதனால் பவானி சாகர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு புறம் காவிரி, மற்றொரு புறம் பவானி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. மாவட்டத்தில் 681 குளங்கள், 17 பெரிய ஏரிகள் மற்றும் சிறு ஏரிகள், ஏராளமான தடுப்பணைகள் உள்ளன. வனப்பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் காவிரி, பவானி ஆறுகளை நம்பியே இந்த நீர்நிலைகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏராளமான ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம்அணை, பெரும்பள்ளம் அணை ஆகியவற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அப்படி இருந்தும் பவானி, காவிரி ஓடும் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கொடுமுடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 56 சிறிய ஏரிகள், 76 குளங்கள், 160 தடுப்பணைகள் உள்ளன. இதில் எண்ணமங்கலம் ஏரி, அந்தியூர் ஏரி,கெட்டி சமுத்திரம் ஏரி, பவானி ஜம்பை ஏரி, அம்மாபேட்டை பூனாட்சி ஏரி ஆகிய 5 ஏரிகளும் நிரம்பியது.
இதே போல் கொடுமுடி யூனியனில் உள்ள கொந்தாலம் ஊராட்சியில் உள்ள கல்லாவரும் கோட்டை பெரிய குளம், காளிப்பாளையம் குளம் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த 2 குளங்களும் நிரம்பி உள்ளது. இதே போல் தேவம்பாளையம் தடுப்பணையும் தற்போது நிரம்பி உள்ளது.
ஆனால் மற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் குறைந்த அளவிலேயே தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் அணையை ஒட்டிய பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது.
- அப்போது வாலிபர் உடல் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ் குமார்(18).
தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த இவர் தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீனா, பிரசாந்த், நிஷாந்த் ஆகிய 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் உள்ள சுஜில் குட்டை பகுதிக்கு சென்று அங்கு நாகராஜ் என்பவரது பரிசலில் ஏரி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பரிசலில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கரிமொக்கை என்ற இடத்தில் சென்ற போது காற்று வேகமாக வீசியதால் அணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் நித்திஷ்குமார் அணை நீரில் மூழ்கி மாயமானார்.
உடன் வந்த நண்பர்கள் 4 பேருக்கும் நீச்சல் தெரிந்ததால் அப்பகுதியில் அருகே சென்று கொண்டிருந்த அய்யாசாமி என்பவரின் பரிசலில் ஏறி உயிர் தப்பினர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார், தீயணைப்பு துறையினர், அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் நீரில் மூழ்கி மாயமான நித்திஷ்குமாரை தேடி வந்தனர். 2 நாட்களாக இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த வாலிபர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று 3-வது நாளாக தீயணைப்பு துறையினர் மீனவர்கள் உதவியுடன் தேடினர். அப்போது நித்தீஷ்குமார் உடல் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
- இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் கடந்த 7-ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.
மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணி யாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 1,547 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 24 ஆயிரத்து 538 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 278 பேரும் என மொத்தம் 42,363 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்து, திங்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கேர்மாளம் பஞ்சாயத்தில் கேர்மாளம், சி.கே.பாளையம், ஜோகனூர், ஜெ.ஆர்.எஸ்.புரம், கானகரை, குடியூர், சி.பி.தொட்டி, ஒருத்தி, தலுதி போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம்.
இப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லை. இங்கு, 10-ம் வகுப்பு வரை உள்ள 5 பள்ளிகள் செயல் படுகின்றன. கொரோனா காலத்தில் இங்குள்ள பள்ளி குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கூட பங்கேற்க முடியவில்லை.
அங்கிருந்து 12 கி.மீ., தூரம் சென்றால் கர்நாடகா மாநிலத்தின் டவர் இணைப்பு கிடைக்கும். அல்லது 9 கி.மீ. மலைப்பகுதியை கடந்தால் சத்தியமங்கலம் டவர் கிடைக்கும்.
ஆனால், மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை. குன்றி, திங்களூர் பகுதியில் தனியார் டவர் தற்போது அமைத்துள்ளனர்.
திங்களூரில் 'ஏ' கிராமப் பகுதியில் தனியார் டவர் இருந்தும், கேர்மாளம் பகுதியில் பயன்படாது. எனவே இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செல்போன் டவர் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிப் முசாப்தீனை கடந்த மாதம் 16ம் தேதி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. போலீசாரின் கோரிக்கையை ஏற்று 10ம் தேதி வரை இரண்டு நாட்கள் ஆசிப் முசாப்தீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்திற்கு ஆசிப் முசாப்தீனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டிற்கு வரும் வழியில் தொழிலாளி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார்.
- இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம், சுள்ளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 42). இவரது மனைவி சவுந்தர பிரியா. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்டன் சூப்பர்வைசராக முருகேஷ் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்ப ழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிற்கு வந்து ள்ளார்.
அப்போது வீட்டிற்கு வரும் வழியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். இவரது மனைவி தோட்டத்து வேலைக்கு காலையிலேயே சென்று விட்டார்.
மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முருகேஷ் வாந்தி எடுத்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அவரிடம் விசாரித்த போது கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றும் முதுகு வலிப்பதாகவும் கூறினார்.
உடனடியாக அக்கம்ப க்கத்தினர் உதவியுடன் சவுந்தரபிரியா முருகேசனை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சையில் இருந்த முருகேஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
- முகாமில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம், கொம்ப னைப்புதூர் கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி உத்தரவின் பேரில் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர்.கோவிந்தராஜ் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் கொம்ப னைப்புதூர் கால்நடை உதவி மருத்துவமனை டாக்டர். சி.விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.
இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பி.ஆர்.சிவக்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.






