அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

வீட்டிற்கு வரும் வழியில் தொழிலாளி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார்.இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம், சுள்ளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 42). இவரது மனைவி சவுந்தர பிரியா. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்டன் சூப்பர்வைசராக முருகேஷ் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்ப ழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிற்கு வந்து ள்ளார்.

அப்போது வீட்டிற்கு வரும் வழியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். இவரது மனைவி தோட்டத்து வேலைக்கு காலையிலேயே சென்று விட்டார்.

மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முருகேஷ் வாந்தி எடுத்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அவரிடம் விசாரித்த போது கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றும் முதுகு வலிப்பதாகவும் கூறினார்.

உடனடியாக அக்கம்ப க்கத்தினர் உதவியுடன் சவுந்தரபிரியா முருகேசனை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சையில் இருந்த முருகேஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com