என் மலர்
ஈரோடு
- அதிகாரிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
கொடுமுடி:
கர்நாடாகா மாநிலத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பியது. அந்த அணை களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ள ளவான 120 அடியை எட்டியது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது அணையில் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றோர பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையொட்டி கொடு முடி மற்றும் ஊஞ்சலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கொடுமுடி, ஊஞ்சலூர், காசிபாளையம், சத்திரப்பட்டி போன்ற இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
இதில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி, துணைத்தலைவர் ராஜா கமால் ஹசன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
இதே போல் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை பகுதி காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அந்த பகுதி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதி மற்றும் கூடுதுறை பகுதி களிலும் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி செல்கிறது. இதை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள்.
இதையொட்டி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஈரோடு அக்ரகாரம், கருங்கல்பாளையம், வெண்டி பாளையம், கொடுமுடி உள்பட காவிரி ஆற்று பகுதிகளில் தண்ணீர் அதிகளவு செல்வதால் அதிகாரித்து காணித்து வருகிறார்கள்.
மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு வருவதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி கண்காணித்து வருகிறார்கள்.
- ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
- சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலை (32). திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ரவி (40). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
திருமலை, ரவி ஆகியோரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனவே, திருமலை, தனது அண்ணன் ரவியின் வீட்டிலேயே வசித்து வந்தார்.
ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு மல்லிகை பூவிற்கு அடிக்கும் மருந்தை (விஷம்) குடித்து ரவி வாந்தி எடுத்துள்ளார். மனைவி சத்யா விசாரித்தபோது அவர் எதுவும் கூறவில்லையாம். இதையடுத்து மறுநாள் ரவியின் உடல் நிலை மோசமடையவே உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பாக்கி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
- குடிநீர் இைணப்பு துண்டிக்கப்படும்.
புன்செய்ப்புளியம்பட்டி:
புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-
புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, கடை வாடகை, ஆண்டு குத்தகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் முன்அறிவிப்பு இன்றி தங்களுடையை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- விவசாயிகள் 10,330 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
மொடக்குறிச்சி:
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 10,330 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 90 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 12,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 972 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.
- தூய்மை பணியாளர்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டி பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன்குமார் தலைமையிலான குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையானவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத பரப்பு ரையாளர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் விளக்கமாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு காணொளி காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.
- கருப்புசாமி என்பவர் தேவராஜின் மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
- தேவராஜ் தனது மளிகை கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 3,200 திருட்டு போயிருந்தது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ். அருகே உள்ள சாணார்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் தேவராஜ் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு தேவராஜ் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அன்று நள்ளிரவு தேவராஜின் மளிகை கடையில் இருந்த பூட்டை யாரோ உடைத்துள்ளனர். அதைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் கருப்புசாமி என்பவர் தேவராஜின் மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கருப்புசாமி உடனடியாக தேவராஜுக்கு தகவல் கொடுதார்.
அதன்பேரில், தேவராஜ் தனது மளிகை கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 3,200 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
அப்போது அங்கு பொருள்கள் வைத்திருக்கும் பகுதியில் படுத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஈரோட்டை சேர்ந்த தரணிதரன் என்பதும், அவருடன் மேலும் 2 பேர் வந்து மளிகை கடையின் பூட்டை உடைத்ததும் தெரியவந்தது.
தரணிதரனுடன் வந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து, தேவராஜ் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தரணிதரனை கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய இருவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
- மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை கொட்டி தீர்த்தது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு 2 மணி வரை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி நின்றது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் மொடக்குறிச்சி அருகே உளள 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையம் காலனி பகுதியில் மழைநீர் மற்றும் பவானி கிளை வாய்ககால் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த 120 பேரை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு 46 புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இணைந்து மழைநீர் வடியவைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மழைநீர் வடியும் வரை இந்த பகுதி மக்கள் முகாமிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல் பெருந்துறை, கோபி செட்டி பாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி சாகர், பவானி,கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, எலந்தகுட்டை மேடு, அம்மாபேட்டை, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், அந்தியூர் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. இதில் அதிக பட்சமாக மொடக்குறிச்சி பகுதியில் 92 மி.மீட்டர் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.
பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சுமார் 4 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து லட்சுமி நகரில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் ரோட்டில் மழைநீர தேங்கி லட்சுமி நகர் பகுதி முழுவதும் மழைநீர் சூழந்தது.
கண்ணாதாசன் நகர், கே.கே.நகர்,பகுதி வீதிகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மேடான பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், நீர்வழிப்பாதைகள் அக்கிரமிக்கப்பட்டதாலும, ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதாலும் தண்ணீர் ரோடுகளை தாண்டி லட்சுமி நகர் பஸ் நிறுத்த பகுதியில் தேங்கியது.
இந்த மழையின் காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார்சைக்கிள்கள், கார்கள் தண்ணீரில் முழ்கியது. இதன் காரணமாக ஈரோடு-மேட்டுர் பிரதான சாலையான லட்சுமி நகருக்குள் வாகனங்கள் வராமல் பாலத்தின் மீது போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 8 மணி வரை ஒரு மணி நேரம் கொட்டியது. இதனால் ரோடுகளில் மழைவெள்ளம் ஆறாக ஓடியது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-38, பெருந்துறை-21,கோபிசெட்டி பாளையம் -25.4, தாளவாடி-54, சத்தியமங்கலம்-8, பவானி சாகர்-5.8, பவானி-14, கொடுமுடி-24, கொடுமுடி-2, சென்னி மலை-29, மொடக்குறிச்சி -92, கவுந்தப்பாடி-36, எலந்த குட்டைமேடு-13.4, அம்மாபேட்டை-27.2, கொடிவேரி-7.2, குண்டேரி பள்ளம்-21.2, வரட்டுபள்ளம்-21.2,
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 430.4 மி.மீ, மழை கொட்டி தீர்த்தது.
- நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
- சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம்- எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ஈரோட்டில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
களிமண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாது காப்பான முறையில் கரைக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரண ங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படு–த்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்த ப்படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மா–க்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்- பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம்எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ண ப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
சுற்று ச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூ ச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்ப டுத்த ப்படவே ண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதி முறை களின்படி கரைக்க வேண்டும்.
விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டு க்கொள்ள ப்படுகிறா ர்கள். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
- ஈரோடு வ. உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
- கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் இன்று வ.உ.சி. பூங்க மார்க்கெட்டிற்கு 12 டன் மட்டுமே காய்கறிகள் வரத்தாகின.
ஈரோடு:
ஈரோடு வ. உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
தாளவாடி, மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஒட்டன்சத்திரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. தினமும் 15 டன் முதல் 18 டவுன் வரத்தாகி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் இன்று வ.உ.சி. பூங்க மார்க்கெட்டிற்கு 12 டன் மட்டுமே காய்கறிகள் வரத்தாகின.
இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்ற கேரட் விலை இந்த வாரம் ரூ.40 அதிகரித்து ரூ.90-க்கு விற்பனையானது.
மேட்டுப்பாளையம் ஊட்டியில் இருந்து கேரட் அதிக அளவில் வரத்தாகி வந்த நிலையில் மழை காரணமாக கேரட் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்த–னர். மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய் - 40, வெண்டைக்காய் - 25, கருப்பு அவரை - 60, பட்ட அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கங்காய் - 60, முட்டைகோஸ் - 35, முருங்கைக்காய் - 50, பாகற்காய் - 40, மிளகா - 80, பீன்ஸ் - 50, கடந்த வாரம் ரூ. 40-க்கு விற்ற பீட்ரூட் இந்த வாரம் ரூ-70 ஆக இருந்துள்ளது. பூசணி–க்காய் - 20, இஞ்சி - 70, சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம்- 25 முதல் 30 வரை விற்பனையானது.
- கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
- அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பவானி:
கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அங்க வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை மற்றும் பசுவேஸ்வரர் வீதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கந்தன் பட்டறை பகுதியில் வசித்த 28 குடும்பத்தினர், பசுவேஸ்வரர் வீதியில் உள்ள 20 குடும்பத்தினரை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைத்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.
பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணிதுவைக்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பஸ் நிலையம் முன்பு பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் குறுக்கே இருந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை:
ஈரோட்டிலிருந்து சென்னிமலை வழியாக 2 தனியார் பஸ்கள் பழனி செல்கிறது. இந்த தனியார் பஸ்கள் இன்று காலை பழனியில் எடுத்து சென்னி மலை வரும்பொழுது 2 பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு தனியார் பஸ் பழனியில் இருந்து காலை 6.20 மணிக்கு எடுத்து சென்னிமலை பஸ் நிலையத்துக்கு 8.50-க்கு வரவேண்டும். அதேபோல் மற்றொரு பஸ் பழனியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னிமலை பஸ் நிலையத்திற்கு 8.55 மணிக்கு வர வேண்டும்.
ஆனால் இன்று காலை அந்த பஸ் 8:48 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் வந்துவிட்டது. அதன் பின்பு வந்த மற்றொரு பஸ் முன்கூட்டி வந்த பஸ் முன்பு குறுக்கே போட்டு எப்படி முன்பு வரலாம் என டிரைவர், கண்டக்டரிடம் இருவரும் தகராறு செய்தனர். காலை நேரமாதலால் பொதுமக்கள் அதிகளவில் இருந்ததால் பெரும் கூட்டம் கூடியது.
பஸ் நிலையம் முன்பு பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் குறுக்கே இருந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீசார் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






