என் மலர்
ஈரோடு
- ஆப்பக்கூடல் ஏரியானது தனது முழு கொள்ளளவான 16.59 மில்லியன் கன அடி நிரம்பி மூன்று வழிந்தோடிகள் வழியாக உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது.
- கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி நிரம்பிய ஏரி தற்போது 2-வது முறையாக ஒரே ஆண்டில் நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் சத்தி-பவானி சாலையின் வழியாக அமைந்துள்ளது ஆப்பக்கூடல் ஏரி. ஆப்பக்கூடல் சாலையி னையொட்டி சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அந்தியூர், ஆப்பக்கூடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஆப்பக்கூடல் ஏரியானது தனது முழு கொள்ளளவான 16.59 மில்லியன் கன அடி நிரம்பி மூன்று வழிந்தோடிகள் வழியாக உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது.
ஆப்பக்கூடல் ஏரியில் உபரிநீர் வெளியேறி ரம்மி யமாக காட்சியளிப்பதால் இதனை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு வந்து செல்கின்றனர். ஆங்காங்கே சிலர் மீன் பிடித்து செல்வ தையும் காண முடிகிறது.
கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி நிரம்பிய ஏரி தற்போது 2-வது முறையாக ஒரே ஆண்டில் நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
- இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
சத்தியமங்கலம்:
ரீடு நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து பணி செய்து வருகிறது.
அதனுடைய தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களுடைய குழந்தை களின் கல்வியை உறுதி செய்யவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
மேலும் அவர்களுக்கு கையால் மலம் அள்ளும் தடைசட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பயிற்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். இந்த பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
ரீடு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் மகேஸ்வரன், சத்தியமங்க லம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, கள ஒருங்கிணைப் பாளர்கள் சரவணக்குமார், சண்முகப்பிரியா, ராஜா மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
- ஒட்டர்கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் 2600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை, ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு:
கடத்தூர் அடுத்துள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சோதனையிட்ட போது ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 2600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை, ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு (37) என்பவரை கைது செய்தனர்.
- ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் உள்ள சாக்கடையில் ஆண் பிணம் சாக்கு மற்றும் போர்வையால் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
- இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமான வீசப்பட்டவர் குறித்து அடையாளம் காண நோட்டீஸ் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் உள்ள சாக்கடையில் கடந்த 30-ந் தேதி இரவு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் சாக்கு மற்றும் போர்வையால் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்த தால் ஓரிரு நாட்களுக்கு முன்பே அந்த நபரை கொலையாளிகள் கொலை செய்துவிட்டு கொண்டு வந்து வீசி சென்றது விசார ணையில் தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை வழக்கில் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணவும், கொலையாளிகளை பிடிக்கவும் ஈரோடு டி.எஸ்.பி. ஆனந்த குமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலை செய்யப்ப ட்டவரின் விவரத்தை கண்டறிந்தால் கொலை யாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்பதால் கொலை செய்ய ப்பட்ட நபரை பற்றி போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கொலை செய்யப்பட்டது யார்? என்பதை கண்டறிய போலீசாருக்கு பெரும் சவால் ஏற்பட்டு உள்ளது. கொலையானவரின் வலது கையில் 'லலிதா' என்றும், இடது கையில் காளி சாமியின் படமும் பச்சை குத்தப்பட்டு உள்ளது.
மேலும் அவரது இடது கையில் இரும்பு காப்பு அணிந்து இருந்தார். எனவே இந்த அடையா ளங்களை வைத்து கொலை செய்யப்பட்டவர் வட மாநிலத்தை சேர்ந்த வராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிணம் வீசப்பட்ட இடம் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மாதம் 30-ந் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் ஒரு நபர் தலையில் சாக்கு மூட்டையை சுமந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது.
அந்த நபர் கொலை யாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். கொலையானவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் விலா எலும்பு களை உடைத்தும் பலமாக உடலில் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமான வீசப்பட்டவர் குறித்து அடையாளம் காண நோட்டீஸ் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டியுள்ளனர்.
- சென்னி மலை கைலாசநாதர் கோவிலில் பிட்டு திருவிழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
- இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும்.
சென்னிமலை:
மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர்.
அப்போது அரசன் உடனடியாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தர விட்டார். வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை.
இதையடுத்து அவர் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார். அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்றார். தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார்.
இதை தொடர்ந்து வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவ பெரு மான் தரிசனமாக காட்சி அளித்தார். அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுகிறது.
இதையொட்டி சென்னி மலை கைலாசநாதர் கோவிலில் பிட்டு திருவிழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இந்த ஆண்டுக்கான பிட்டு திருவிழா வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
அன்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது. சென்னிமலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்க ப்பட்டு மாலை 3.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாச நாதர், அலமேலுமங்கை மற்றும் வள்ளி தெய்வானை யுடன் சுப்பிரமணியசுவாமி தேரில் அருள் பாலிக்கிறார்.
இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும்.
இதற்கான ஏற்பாடுகளை பிட்டு திருவிழா குழு தலைவர் ஜெயலட்சுமி பரமானந்தன் தலைமையில் செய்து வருகின்றனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியே ற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து இருந்தாலும் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால் இங்கு குறைந்த அளவே மழை பதிவாகும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்ற காரணத்தால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தால் ஈரோடு மாவட்டத்திலும் மழை பதிவாகும்.
பருவமழையும் குறைந்த அளவே பதிவாகும். ஆனால் கடந்த சில ஆண்டாக தென்மேற்கு பருவமழையைவிட, வட கிழக்கு பருவமழை யின்போதே அதிகமாக மழை பதிவாகியது. இருப்பினும் இம்மாவட்ட த்தின் சராசரி மழை 733.44 மி.மீட்டராகும்.
இந்நிலையில் நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 581.61 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் தினமும் மாலையில் மழை பெய்து வருவதாலும், குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்வதாலும், நடப்பாண்டு பயிர் சாகுபடிக்கு, தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 212 மி.மீட்டர் பதிவாகும். கடந்த சில ஆண்டாக இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகிறது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தவிர வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், முதல் டிசம்பர் வரை 316 மி.மீ. மழை பெய்ய வேண்டும். நடப்பா ண்டு இதைவிட கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. அதற்கேற்ப பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக முழு கொள்ளளவில் உள்ளது.
நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதுடன் உபரி நீரே வெளியேற்றும் நிலை உள்ளதால் நடப்பாண்டு இரு போக சாகுபடியும் உறுதியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்–2ன் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 6-ந் தேதி நம்பியூர் தாலுகாவில் உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா திருவாச்சி அரசு உயர்நிலை பள்ளியிலும் 7-ந் தேதி நம்பியூர் தாலுகா எலத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி, பெருந்துறை தாலுகா திங்களூர் எம்.பி.டீ.அரசு மேல்நிலைப்ப ள்ளியிலும், வருகிற 9-ந் தேதி நம்பியூர் தாலுகா வேமாண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா விஜயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூ.டி.ஐ.டி.,) கட்டாயம் என்பதால், அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.
- மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
ஈரோடு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பட உள்ளன.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம் 3 மணிக்கும் நடக்கிறது.
மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை முதல்வர்- தலைமை யாசிரியர் கையெழுத்து பெற்று, போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், வழங்கப்படும்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் மட்டும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு ரூ.2 ஆயிரம சிறப்புப் பரிசுத் தொகை வழங்க ப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
- ஈரோடு மாவட்டத்தில் 2ஆயித்து 222 வாக்குசாவடி மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய்யவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நாளை (4-ந் தேதி) ஈரோடு மாவட்டத்தில் 2ஆயித்து 222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அவரவர் வாக்குசாவடியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் 6-பி படிவத்தினை பூர்த்தி செய்து தருவதன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் ஏஎஸ்டி16, டிபிஎஸ் 5, எம்டியு1010, ஏடி37, கோ51, ஜோதி ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விதைப்பண்ணை பயிரானது தற்போது பூப்பருவம் மற்றும் அறுவடை பருவத்தில் உள்ளது.
இவ்விதைப்பண்ணைகளை ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் எஸ்.மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியின்போது விதைப்பயிர் நடவுமுறை, கலவன்கள் அகற்றும் முறை, பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் பற்றி கூறினார்.
மேலும் இந்த பருவத்தில் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் பயிர்பாதுகாப்பு முறைகளை பற்றி கூறினார்.
இப்பயிற்சியின்போது ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் டி.என்.பாளையம் வட்டார உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மலையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலைய பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்கள் ராமலிங்கம், குருசாமி, சரோஜா, பழனிசாமி, மலர்ச்செல்வி, ஆறுமுகம், ருத்ரமூர்த்தி, உமாமகேஸ்வரி, பத்மா, சுப்பிரமணி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சிகளை வெளிபடுத்திக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் சார்பில் 80 ஆயிரம் நன்கொடை பள்ளிக்கு வழங்கினர்.






