என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Is the person lying dead"

    • ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் உள்ள சாக்கடையில் ஆண் பிணம் சாக்கு மற்றும் போர்வையால் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
    • இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமான வீசப்பட்டவர் குறித்து அடையாளம் காண நோட்டீஸ் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் உள்ள சாக்கடையில் கடந்த 30-ந் தேதி இரவு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் சாக்கு மற்றும் போர்வையால் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்த தால் ஓரிரு நாட்களுக்கு முன்பே அந்த நபரை கொலையாளிகள் கொலை செய்துவிட்டு கொண்டு வந்து வீசி சென்றது விசார ணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை வழக்கில் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணவும், கொலையாளிகளை பிடிக்கவும் ஈரோடு டி.எஸ்.பி. ஆனந்த குமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    கொலை செய்யப்ப ட்டவரின் விவரத்தை கண்டறிந்தால் கொலை யாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்பதால் கொலை செய்ய ப்பட்ட நபரை பற்றி போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கொலை செய்யப்பட்டது யார்? என்பதை கண்டறிய போலீசாருக்கு பெரும் சவால் ஏற்பட்டு உள்ளது. கொலையானவரின் வலது கையில் 'லலிதா' என்றும், இடது கையில் காளி சாமியின் படமும் பச்சை குத்தப்பட்டு உள்ளது.

    மேலும் அவரது இடது கையில் இரும்பு காப்பு அணிந்து இருந்தார். எனவே இந்த அடையா ளங்களை வைத்து கொலை செய்யப்பட்டவர் வட மாநிலத்தை சேர்ந்த வராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிணம் வீசப்பட்ட இடம் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மாதம் 30-ந் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் ஒரு நபர் தலையில் சாக்கு மூட்டையை சுமந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது.

    அந்த நபர் கொலை யாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். கொலையானவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் விலா எலும்பு களை உடைத்தும் பலமாக உடலில் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் பிணமான வீசப்பட்டவர் குறித்து அடையாளம் காண நோட்டீஸ் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    ×