என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.
    • மழை காலமாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பாலும், பிற மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்து ள்ளதாலும் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.

    கடந்த பல நாட்களாக குவிண்டால் மஞ்சள் சராசரியாக 7,500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கடந்த சில நாட்களாக 8,000 ரூபாயை கடந்து விற்பனையானது.

    நேற்று பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 5,799 ரூபாய் முதல் 8,129 ரூபாய்க்கும், கிழங்கு 5,280 முதல் 6,839 ரூபாய்க்கும் விற்பனை யானது. இதேபோல் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி 5,729 முதல் 8,259 ரூபாய் வரையிலும், கிழங்கு 5,369 முதல் 6,802 ரூபா ய்க்கும் விற்பனையானது.

    ஈரோடு சொசைட்டியில் விரலி 5,739 முதல் 8,210 ரூபாய்க்கும், கிழங்கு 5,399 முதல் 6,959 ரூபாய் வரையிலும், கோபி சொசைட்டியில் விரலி 6,083 முதல் 6,899 ரூபாய்க்கும், கிழங்கு 6,274 முதல் 6,375 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

    மழை காலமாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பாலும், பிற மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்து ள்ளதாலும் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது.

    தரமான மஞ்சளுக்கு 8,000 ரூபாய் கடந்து விலை கிடைப்பதால் இருப்பு வைத்துள்ள விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் நாட்களில் இதே போன்ற விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அணைக்கு வினாடிக்கு 2,422 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரிபள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

    • கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களான அரசூர் ராஜா வீதியை சேர்ந்த ராஜ் மனைவி சுமதி (45), ராஜு வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (45). கட்டிட கான்டிராக்டர்.

    இந்நிலையில் மகேந்திரன் பூசாரி தோட்டத்தில் அவர் வேலை செய்யும் புதிய கட்டிடத்திற்கு அருகில் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான டிரிலிங் மிஷின், மர கட்டிங் மிஷின், இரும்பு கட்டிங் மிஷின், கிரேன் மிஷின் ஆகியவை வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்து மகேந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த யுவராஜ் (22), பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்த பாஸ்கர் (25), மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த வசந்த் (26) ஆகியோர் திருடியது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில்.
    • விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் அடைக்கப்படும். ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூ்ா, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு தினமும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் தினமும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 8-ந் தேதி அன்று மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை 6½ மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும்.

    எனவே அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பொலவகாளி பாளையம் பகுதியில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.
    • காப்பகத்தில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆண்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் பகுதிகளில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து சோதனை செய்தனர்.

    அப்போது பொலவகாளி பாளையம் பகுதியில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் கோபி செட்டிபாளையம் போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த குழந்தைகள் காப்பகம் கடந்த 4 மாதமாக அனுமதியின்றி செயல்பட்டதும். அங்கு 18 வயதுக்குட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆண்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து அந்த காப்பகத்தின் நிர்வாகி குருமூர்த்தி என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்துள்ள ஏமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரது தங்கை கல்யாணி யுடன் தங்கி வசித்து வந்தார். திருமணம் ஆகாமல் உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு வருகிறோம் என ராணி வேதனை அடைந்து வந்தார்.

    இந்நிலையில் கல்யாணி வேலைக்கு சென்று விட்டார். ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    கல்யாணியின் மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அவர் மேலே ஏறி பார்த்தார். அப்போது ராணி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி கொடு முடி அரசு மருத்துவமனைக்கு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுப்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (54), பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி (56) ஆகிய 2 பேரும் வெள்ளைத் தாளில் எண்கள் எழுதி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் அரச்சலூர் அருகே உள்ள தலவுமலை 4 ரோடு பகுதியில் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அட்டவணை அனுமன் பள்ளி பகுதியை சேர்ந்த லோகநாதன் (26) என்பவரை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து ரூ.5,410 மதிப்பிலான தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளும் 

    • பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

    பவானி:

    பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் பவானி நகர் முழுவதும் மற்றும் மூன்ரோடு, ஊராட்சி கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்ப நாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டகாட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

    • சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்ற ராமாத்தாள் அதன்பின் வீடு திரும்பவில்லை.
    • இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமாத்தாளை தேடி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவரது தாய் ராமாத்தாள் (55). ராமாத்தாளின் இளைய மகன் மணிகண்டன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார்.

    அதன் காரணமாக ராமாத்தாள் சற்று மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

    உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ராமாத்தாள் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமாத்தாளை தேடி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சத்தியமங்கலம் தலமலை கஸ்பா பகுதியை சேர்ந்த சின்னராசு (24), கே.என்.பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (29), குருமந்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.11,700 மதிப்பிலான 650 கிராம் கஞ்சா, 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,792 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

    ×