கட்டுமான எந்திரங்கள் திருடிய 3 வாலிபர்கள் கைது

சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
கட்டுமான எந்திரங்கள் திருடிய 3 வாலிபர்கள் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (45). கட்டிட கான்டிராக்டர்.

இந்நிலையில் மகேந்திரன் பூசாரி தோட்டத்தில் அவர் வேலை செய்யும் புதிய கட்டிடத்திற்கு அருகில் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான டிரிலிங் மிஷின், மர கட்டிங் மிஷின், இரும்பு கட்டிங் மிஷின், கிரேன் மிஷின் ஆகியவை வைத்திருந்தார்.

சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து மகேந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த யுவராஜ் (22), பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்த பாஸ்கர் (25), மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த வசந்த் (26) ஆகியோர் திருடியது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com