என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
    • இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே லலிதா ஓட்டல் சந்து பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

    நேற்று இரவும் வழக்கம் போல் குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த கதிரவன் மற்றும் முனீர் அகமது ஆகியோருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் ஒருவர் 2 மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரிப்பது பதிவாயிருந்தது.

    இந்த செயலில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மொடக்குறிச்சி அனைத்து வணிகர்கள் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
    • மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான இடத்தை மொட க்குறிச்சி தாசில்தார் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

    இந்நிலையில் மொட க்குறிச்சி தாசில்தார் நீதி மன்றம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் காலம் தாழ்த்தி வருவதாக பொது மக்கள் புகார் கூறினர். மேலும் மொடக்குறிச்சிக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக கூறி மொடக்குறிச்சி அனைத்து வணிகர்கள் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

    இந்நிலையில் மொடக் குறிச்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் கிராம கமிட்டி தலைவர் கொளந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். மொட க்குறிச்சியில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் இருந்தும் அதனை அரசுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வரு கிறார்கள்.

    எனவே மொடக்குறிச்சி தாசில்தாரை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) மொடக்குறிச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. ேமலும் நாளை மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்று மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கமேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பின்னர் கோவிலின் உள் பகுதியில் பக்தர்கள் முன்னிலையில் வேதனாகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    பவானி:

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் சன்னதி போன்றவைகள் ஒரே வளாகத்தில் அமையப்பெற்று உள்ளது.

    அதேபோல் கோவில் பின்னால் இரட்டை விநாயகர் சன்னதி, படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் தினசரி உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கமேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் உள் பகுதியில் பக்தர்கள் முன்னிலையில் வேதனாகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    இதில் பவானி, காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குமாரபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்

    • அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    • நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் கொரோ னா தினசரி பாதிப்பு 3 ஆக பதிவாகியுள்ளது.
    • மாவட்டத்தில் 33 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நட வடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்க ளாகவே கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் கொரோ னா தினசரி பாதிப்பு 3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து விடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 820 ஆக இருந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்து ள்ளனர். மாவட்டத்தில் 33 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் செல்லும் போது மறக்காமல் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    • சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.
    • இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறுகிய இடம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சூளை மற்றும் சோலாரில் 2 பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் முழுமையாக இந்த பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட உள்ளன.

    இதற்கான பணிகள் கடந்து சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பஸ் நிலையத்தில் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறைகள் கட்டப்பட்டுள்ளன.

    கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. பஸ் நிலையத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. தற்போது பயணிகளுக்கு தேவையான குடிநீர் , நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகின்றன.

    இந்த பணிகளும் முடிந்து இன்னும் 2, 3 வாரங்களில் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
    • நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது.

    அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 2,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 4,791 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக மட்டும் 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.

    தற்போது பவானிசாகர் அணை 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பக்தர்கள் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பீம் யுபிஐ போன்ற செல்போன் செயலிகளை பயன்படுத்தி காணிக்கைகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின்பகுதியில் உள்ள காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்ன கத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தினசரி பரிகார பூஜைகள் செய்து வழிபட ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகை தந்து பல்வேறு வகையான பரிகாரங்கள் செய்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நன்கொடை வழங்குவதற்காகவும், காணிக்கை செலுத்துவ தற்காகவும் யுபிஐ ஐடியுடன் கூடிய க்யூஆர் கோடு அட்டைகள் வங்கி சார்பில் கோவில் உதவி ஆணையர் சுவாமி நாதனிடம் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் பக்தர்கள் எந்த ஒரு யுபிஐ ஐடி மூலம் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பீம் யுபிஐ போன்ற செல்போன் செயலிகளை பயன்படுத்தி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தங்களது காணிக்கைகளை செல்போன் வழியாக செலுத்தலாம் எனவும், கோவிலில் 20 இடங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.
    • இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் நவீன் குமார் (21). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் சத்திய மங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை நவீன்குமார் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாணவியின் பின்னால் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில், நவீன்குமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

    இதில் மாணவியின் கழுத்தில் 6 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. வலியால் அலறித்துடித்த மாணவியின் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே நவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை அங்கிரு ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பியூரில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் மாணவி பின்னால் நவீன் செல்லும் காட்சி, மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவி பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    • மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இந்நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் மாலை முதல் இரவு வரை பலத்த முதல் மிதமான மழை வரை பெய்துள்ளது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக இந்த பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இங்கு 31.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் பவானிசாகர், பெருந்துறை, குண்டேரிபள்ளம், அம்மா பேட்டை, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, கொடுமுடி, நம்பியூர், பவானி, கோபி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    மொடக்குறிச்சி-31.40, பவானிசாகர்-30.2, பெருந்துறை-21, குண்டேரிபள்ளம்-21, அம்மாபேட்டை-15.60, ஈரோடு-12, சத்திய மங்கலம்-12, கவுந்தப்பாடி-6.20, கொடுமுடி-6, நம்பியூர்-5, கோபி-3.20, பவானி-3, வரட்டுபள்ளம்-1.40.

    • போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடகா எல்லை யில் அமைந்துள்ளது புளி ஞ்சூர் சோதனைசாவடி. இங்கு போலீசார் மற்றும் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகன ங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் இங்கு சோத னைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கர்நாடக வில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு மது வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அநத வழியாக கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஈச்சர் வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெங்காய மூட்டை இருந்தது.

    மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வெங்காய மூட்டைகளை இறக்கி பார்த்த போது வெங்காய மூட்டை அடியில் கேன்களில் ஸ்பிரிட் இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஹரி மற்றும் வினோத் என்பதும், அவர்கள் மைசூரில் இருந்து கேரளாவுக்கு மதுவுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் வெங்காய மூட்டைக்கு அடியில் பதுக்கி கடத்தி சென்றதும் தெரியவந்து.

    இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், பிற தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் உறுதியாகி உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தாக்குதல் இல்லை. பறவை காய்ச்சல் நோய், பறவை இனங்களை தாக்கும் வைரஸ் தொற்று நோய்.

    இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள், வனப்பற வைகளை தாக்கும். இந்நோய் கிருமி பல வகையாக இருந்தாலும் 'எச்5என்1' என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது.

    இந்நோய் பாதிப்பு பண்ணையில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழித்தீவனம் மூலம் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. நோய் வராமல் தடுக்க உயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும்.

    மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், புறக்கடை கோழிகளை நேரில் கண்காணித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் கால்நடை துறை உள்ளது.

    கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், பிற தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது. கடந்த ஒரு மாதத்தில் இவ்வாறு முட்டை, தீவன பொருட்கள் வாங்கினால் அவற்றை அழிக்கலாம்.

    பண்ணைக்குள் செல்வோர் கால்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்து செல்லலாம். பண்ணைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுமதிக்க வேண்டும்.

    பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும்.

    பண்ணைகளில் அசாதாரண இறப்பு இருந்தால் கால்நடை துறைக்கு தெரிவிக்க வேண்டும். பண்ணையா ளர்கள் வேறு பண்ணைகள், பறவைகள் சரணாலயம் செல்வதையும், பண்ணை க்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    பிற மாநிலத்துக்கு முட்டைகளை எடுத்து செல்ல, காகித அட்டை பெட்டிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த பெட்டிகளை திரும்ப எடுத்து வரக்கூடாது.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×