என் மலர்
உள்ளூர் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு
- சங்கமேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- பின்னர் கோவிலின் உள் பகுதியில் பக்தர்கள் முன்னிலையில் வேதனாகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
பவானி:
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் சன்னதி போன்றவைகள் ஒரே வளாகத்தில் அமையப்பெற்று உள்ளது.
அதேபோல் கோவில் பின்னால் இரட்டை விநாயகர் சன்னதி, படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இதனால் தினசரி உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கமேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
பின்னர் கோவிலின் உள் பகுதியில் பக்தர்கள் முன்னிலையில் வேதனாகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் பவானி, காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குமாரபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்






